ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகி மறைவுக்கு ஆறுதல் கூறச் சென்ற, அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை பொதுமக்கள் அடித்து உதைத்து விரட்டி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஏலூர் பகுதியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகியும், கிராம தலைவருமான ஒருவரை, கடந்து இரண்டு நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் படுகொலை செய்தனர்.
இவரது மறைவிற்காக அக்கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஆறுதல் கூறுவதற்காக அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள், இந்த கொலை சம்பவத்தில் அந்த எம்எல்ஏ.,வுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி, அவர் மீது தாக்குதல் நடத்தினர்.
கடும் கோபத்தில் இருந்த மக்களின் தாக்குதலிலிருந்து எம்எல்ஏவை ஒருவழியாக பத்திரமாக மீட்டு அவரை போலீசார் காப்பாற்றினர்.