வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி,”தற்போதைய
மற்றும் எதிர்கால பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில், ராணுவத்தின்
தயார் நிலையை உறுதி செய்வதே என் முதல் பணி,” என, ராணுவ தலைமை தளபதியாக
பொறுப்பேற்றுள்ள மனோஜ் பாண்டே கூறினார்.
![]() |
அணிவகுப்பு மரியாதை
ராணுவ தலைமை
தளபதியாக இருந்த எம்.எம்.நரவானே நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார்.
இதையடுத்து புதிய தலைமை தளபதியாக, துணை தளபதியாக இருந்த மனோஜ் பாண்டே
பொறுப்பேற்றார். நேற்று, டில்லி சவுத் பிளாக் பகுதி யில் அவருக்கு ராணுவ
அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கடற்படை தலைமை தளபதி
ஹரி குமார், விமானப்படை தலைமை தளபதி வி.ஆர். சவுத்ரி உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
முதல் பணி
அணிவகுப்பு மரியாதையை ஏற்றபின், மனோஜ் பாண்டே
கூறியதாவது: ராணுவத்தை வழிநடத்தும் பொறுப்பு என்னிடம்
ஒப்படைக்கப்பட்டிருப்பது மிகவும் பெருமையாகவும், கவுரவமாகவும் உள்ளது; அதை
நான் முழு மனதுடன் ஏற்கிறேன். பணிவு, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்
ஆகிய மதிப்புகளுக்கு ராணுவம் தன்னை முழுமையாக அர்ப்பணித்து உள்ளது.தற்போதைய
மற்றும் எதிர்கால பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ராணுவத்தின்
தயார் நிலையை உறுதி செய்வதே என் முதல் பணி.
உலகளாவிய புவிசார் அரசியல்
நிலைமை வேகமாக மாறி வருகிறது. இதனால் நம்முன் பல சவால்கள் உள்ளன.
விமானப்படை, கடற்படை யுடன் ஒருங்கிணைந்து மற்றும் ஒத்துழைப்புடன், எந்த
சூழ்நிலையையும் ராணுவம் சமாளிக்கும்.ராணுவத்தில் சுயசார்பை எட்டுவதற்கு
முக்கியத்துவம் அளிப்பதுடன், தற்போதைய சீர்திருத்தங்கள், மறுசீரமைப்பு
மற்றும் மாற்றம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
![]() |
ஆயுத
படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை
மேம்படுத்துவதே என் நோக்கம்.முந்தைய தலைமை தளபதிகள் மேற்கொண்ட நல்ல பணிகளை
முன்னெடுத்து செல்வதுடன், ராணுவ அதிகாரிகளைமற்றும் வீரர்களின் நலன் உறுதி
செய்வதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement