சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியதாக கூறி, 6 லட்சம் நஷ்டஈடு கேட்டு மாப்பிள்ளை வீட்டார் வீடு, புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம், அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த குடும்பத்தையே ஊரை விட்டு அடித்து விரட்டி அனுப்பி உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பெரும் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர ஜோதி கேசவன். இவரது வீட்டின் பக்கத்துக்கு வீட்டில் உள்ள சிறுமிக்கு திருமணம் நடக்க இருந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, ஜோதி கேசவன் சமூக அக்கறை கொண்ட மனிதனாக, சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை புகார் அளித்து தடுத்து நிறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாப்பிள்ளை வீட்டார் கடந்த 27ஆம் தேதி அவரது வீட்டை அரிவாள், இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து அடித்து நொறுக்கியுள்ளனர்.

மேலும், வழக்கறிஞரான அவரின் அண்ணனை பொன்னேரி பேருந்து நிலையம் அருகே வைத்து தாக்கியதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து ஜோதி கேசவன் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரரில், ‘குத்தகை அடிப்படையில் விவசாயம் நடத்திவரும் தங்களிடம், இந்த பகுதியில் வாழவேண்டுமென்றால் திருமணத்துக்காக செய்த செலவு தொகை ஆறு லட்சம் ரூபாய் தரவேண்டும் என்று, மாப்பிள்ளை வீட்டார் கேட்டதாக’ தெரிவித்து இருக்கிறார்.