ரம்ஜான் பண்டிகை நெருங்கும் நிலையில், அன்னூர் ஆட்டுச் சந்தையில் நேற்று ரூ.8 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்னூரில் ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். நேற்றும் வழக்கம்போல கூடிய சந்தையில் அதிகாலை முதலே ஆடுகள் விற்பனை களைகட்டியது. ரம்ஜான் பண்டிகை நெருங்கும் நிலையில், இறைச்சி வியாபாரிகள் போட்டிபோட்டுக் கொண்டு, ஆடுகளை வாங்கிச் சென்றனர். கோவை மாவட்டம் மட்டுமின்றி, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் சந்தையில் கூடினர்.
இதுகுறித்து ஆடு வியாபாரிகள் கூறும்போது, ‘‘அன்னூர் வாரச்சந்தையில் வெள்ளாடு, குரும்பாடு, செம்மறி ஆடு, மலையாடு உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இன்று (நேற்று) கூடிய சந்தையில் குட்டி ஆடுகள் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரையிலும், சற்று எடையுள்ள ஆடுகள் ரூ.8,000 முதல் ரூ.20,000 வரையிலும் விற்பனை செய்யப்பட்டன,’’ என்றனர்.