புதுடில்லி,-அதிவேக ‘வந்தே பாரத்’ பயணியர் ரயிலை போலவே, மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் பயணிக்க கூடிய, ‘வந்தே பாரத்’ சரக்கு ரயில் போக்குவரத்து சேவையை ரயில்வே நிர்வாகம் விரைவில் துவக்க உள்ளது.
பயணியர் ரயில் போக்குவரத்தை மேம்படுத்த அதிவேக, ‘வந்தே பாரத்’ ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. வரவேற்புஇந்த ரயில்கள் மணிக்கு, 160 கி.மீ., வேகத்தில் பயணிப்பதால் முக்கிய நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் கணிசமாக குறைந்தது. இதற்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், வந்தே பாரத் ரயில் சேவையை சரக்கு போக்குவரத்துக்கும் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
இதற்காக, மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் பயணிக்க கூடிய, 16 பெட்டிகளை உடைய அதிவேக ரயில், 60 கோடி ரூபாய் செலவில் சென்னை ஐ.சி.எப்., எனப்படும் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளன. மொத்தம் 25 அதிவேக சரக்கு ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.வழக்கமாக மணிக்கு 75 கி.மீ., வேகத்தில் பயணிக்க கூடிய 45 பெட்டிகள் அடங்கிய சரக்கு ரயிலை தயாரிக்க ஆகும் செலவை விட இது மூன்று மடங்கு அதிகம். புதிய வந்தே பாரத் சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் குளிரூட்டப்பட்டதாக வடிவமைக்கப்பட உள்ளன.
காய்கறி, பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் இதில் எடுத்து வரப்படும்.40 சதவீதம்’அமேசான், பிளிப்கார்ட்’ போன்ற ‘ஆன்லைன்’ வர்த்தக நிறுவனங்களுக்கான சரக்கு போக்குவரத்து தேவை அதிகரிக்க துவங்கி உள்ளதை அடுத்து, அந்த சந்தையை கைப்பற்ற ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.சரக்கு போக்குவரத்தில் ரயில்வே நிர்வாகத்தின் சந்தை மதிப்பு தற்போது 28 சதவீதமாக உள்ளது. இதை, 2030க்குள் 40 சதவீதமாக உயர்த்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.
Advertisement