திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சின்ன வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்காததால், வெங்காயங்களை பொதுமக்கள் இலவசமாக எடுத்துச் செல்லலாம் எனக்கூறி விவசாயி ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சின்ன வெங்காயம் விளைச்சல் அதிகரித்து சந்தைக்கு வரத்து அதிகரித்திருப்பதால் ஒரு கிலோ 7 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
இதனால் வண்டி வாடகை, கூலி கொடுக்க முடியாத நிலை ஏற்படுவதாக விவசாயிகள் கூறும் நிலையில், பணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவராஜ், தனது 2 ஏக்கர் நிலத்தில் விளைந்திருக்கும் சின்ன வெங்காயத்தை மக்கள் இலவசமாக பறித்துச் செல்லலாம் எனக் கூறி வீடியோ வெளியிட்டிருக்கிறார்.