புதுடெல்லி: பாகிஸ்தான், சீன எல்லை பகுதிகளில் நிலைமை இயல்பாக உள்ளது என புதிய ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே கூறியுள்ளார்.
அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: “பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைப் பகுதிகளில் நிலைமை இயல்பாக உள்ளது. இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் ஏற்கெனவே உள்ள நிலைப்பாட்டில் எந்த மாற்றத்தையும் அனுமதிக்க மாட் டோம் என சீனாவிடம் இந்தியா தெளிவுபட கூறிவிட்டது. அதையும் மீறி எல்லையில் ஏற்கெனவே உள்ள நிலையை மாற்றும் நட வடிக்கையில் சீனா ஈடுபட்டால், போதிய பதில் நடவடிக்கையில் நாம் ஈடுபட வேண்டும்.
கடந்த 2 ஆண்டுகளாக, சீனா எல்லையில் தொடர் அச்சுறுத்தல் களை மதிப்பீடு செய்து, அங்கு படை பலத்தை இந்திய ராணுவம் மாற்றியமைத்து வருகிறது. சீன எல்லையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிலைகளில் இந்திய வீரர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
இந்தியா – சீனா இடையே எல்லை பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என நம்பிக்கையுடன் உள்ளோம். சீன எல்லையில் பதற்றத்தை குறைப்பது தான் இந்திய ராணுவத்தின் நோக்கம். சீன எல்லையில் ஏற்கெனவே இருந்த நிலை கூடிய விரைவில் மீட்கப்படும்.
இந்தியா-பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு பகுதி அருகே வசிக்கும் மக்கள் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஊடுருவல், வன்முறை சம்பவங்கள் குறைந்தாலும், எல்லைக்குஅப்பால், தீவிரவாத செயல்பாடுகள் குறைந்ததற்கான அறிகுறிஇல்லை. தீவிரவாத செயல்பாடுகள், பயிற்சிகள் அதிகரித்துள்ளதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்”. இவ்வாறு மனோஜ் பாண்டே கூறினார்.