இந்தியாவில், விவோ நிறுவனம் அதன் டி-சீரீஸின் கீழ் டி1 ப்ரோ (Vivo T1 Pro) மற்றும் விவோ டி1 (Vivo T1) ஆகிய 2 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. விவோ டி1 ப்ரோ 5ஜி மொபைல், ஸ்னாப்டிராகன் 778ஜி 5ஜி சிப்செட்-வுடனும், விவோ டி1 மொபைல் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்-வுடனும் வந்துள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் பிளிப்கார்ட் தளத்திலும், விவோ ஸ்டோர் உட்பட பல முக்கிய கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.
இரண்டு ஸ்மார்ட்போனும் இன் டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் வசதி மட்டுமின்றி Funtouch OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் கொண்டுள்ளது.
Vivo T1 Pro 5G சிறப்பு அம்சங்கள்
- 6.44 இன்ச் டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 778ஜி 5ஜி பிராசஸர்
- ஆண்ட்ராய்டு 12
- 6ஜிபி, 8ஜிபி ரேம்
- 128ஜிபி ஸ்டோரேஜ்
- பின்பக்கத்தில் 64எம்.பி முதன்மை கேமரா, 8 எம்.பி அல்ட்ரா வைட் கேமரா, 2 எம் மெக்ரோ கேமரா என மூன்று பின்புற கேமரா உள்ளது.
- 16 எம்.பி செல்ஃபி கேமரா
- 4700mAh பேட்டரி
- 66 வாட்ஸ் ஃபிளாஷ்சார்ஜிங் சப்போர்ட்
விலை, விற்பனை விவரம்
- 6ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் – ரூ23,999
- 8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் – ரூ24,999
டர்போ பிளாக் மற்றும் டர்போ சியான் ஆகிய 2 நிறங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் வருகிற மே 7 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.
இந்த ஸ்மார்ட்போனை மே 31 ஆம் தேதிக்கு முன்பு, ICICI/SBI/IDFC First Bank/OneCard ஆகியவை பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளர்கள், வாடிக்கையாளர்கள் சாதனத்தில் ரூ.2,500 மதிப்புள்ள பலன்களைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவோ T1 44 வாட்ஸ் சிறப்பு அம்சங்கள்:
- 6.44 இன்ச் டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 680 புராசஸர்
- ஆண்ட்ராய்டு 12
- 50 எம்.பி முதன்மை கேமரா, 2எம்.பி மெக்ரோ கேமரா, 2 எம்.பி bokeh கேமரா என மூன்று பின்புற கேமராக்கள் உள்ளன
- 16 எம்.பி செல்பி கேமரா
- 4ஜிபி, 6ஜிபி, 8ஜிபி ரேம்
- 128 ஜிபி ஸ்டோரேஜ்
- 5000mah பேட்டரி
- 44 வாட் ஃப்ளாஷ் சார்ஜ் சப்போர்ட்
விலை, விற்பனை விவரம்
- 4ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் – ரூ14,999
- 6ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் – ரூ15,999
- 8ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் – ரூ17,999
ஐஸ் டான், மிட்நைட் கேலக்ஸி மற்றும் ஸ்டாரி ஸ்கை ஆகிய மூன்று நிறங்களில் வெளிவந்துள்ள இந்த் ஸ்மார்ட்போன், வரும் 8-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.
இந்த ஸ்மார்ட்போனுக்கும் விவோ T1 44-க்கு வழங்கிய குறிப்பிட்ட கார்டுகளை உபயோகித்து மே 31க்குள் வாங்கினால், ரூ1500 மதிப்பிலான பலன்களை பெறமுடியும்.