
மாடலாக மாறிய சுஜிதா தனுஷ்
சினிமா மற்றும் சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று வரை பீல்ட் அவுட் ஆகாமல் இருப்பவர் நடிகை சுஜிதா தனுஷ். தற்போது விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் சுஜிதா தனுஷூக்கு ஏரளமான ரசிகர்கள் உள்ளனர். பொதுவாக சீரியல் நடிகைகள் அனைவருமே இன்று சமூகவலைதளங்களில் விளம்பரம் புரோமோஷனில் முக்கிய அங்கமாக இருந்து வருகின்றனர். அந்த வரிசையில் பிரபல நடிகை சுஜிதாவும் மாடலாக மாறி வருகிறார். சமீபத்தில் விளம்பர இயக்குநராக அவதாரம் எடுத்திருந்த அவர் இன்ஸ்டாவில் சில போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது பகிர்ந்து வருகிறார்.