ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்த தாஸ் புதன்கிழமை மதியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் ரெப்போ வட்டி விகிதத்தை, உடனடியாக 4 சதவீதத்திலிருந்து 0.40 சதவீதம் அதிகரித்து 4.4 சதவீதமாக உயருகிறது அறிவித்தார்.
மே 3 அட்சய திருதியை: தங்கம் வாங்க இதுதான் ‘நல்ல; நேரம்..!
கடைசியாக 2020-ம் ஆண்டு மே மாதம் கொரோனா காரணமாக ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. அதன் பிறகு வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

பணம் இருப்பு விகிதம்
ரெப்போ வட்டி விகிதம் மட்டுமல்லாமல் பணம் இருப்பு விகிதமும் 0.50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் கடன் வாங்கியவர்களின் ஈ.எம்.ஐ அதிகரிக்கும். மறுபக்கம் புதிதாக பிக்சட் டெபாசிட் திட்டங்களில் செமிக்க இருப்பவர்களுக்கு வட்டி விகிதம் அதிகரித்து லாபமும் உயரும்.
எனவே பிக்சட் டெபாசிட், வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடன் திட்டங்களில் வரும் நாட்களில் என்னவெல்லாம் மாற்றம் ஏற்படும். எந்த செலவுகள் எவ்வளவு அதிகரிக்கும் என இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

பிக்சட் டெபாசிட்
குறைந்து வந்த ரெப்போ வட்டி விகிதம் திரும்ப எப்பவெல்லாம் உயருகிறதோ, அப்போது எல்லாம் குறைந்த கால திட்டங்களின் வட்டி விகிதம் முதலில் உயரும். எனவே விரைவில் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்ய இருப்பவர்கள் அல்லது ஏற்கனவே உள்ள பிக்சட் டெபாசிட் திட்டங்களைப் புதுப்பிக்க இருப்பவர்கள் இப்போதைக்கு குறைந்த கால பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
ரெப்போ வட்டி அதிகரிப்பு குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளதால், வியாழக்கிழமை முதல் வணிக வங்கிகள் பிக்சட் டெபாசிட் உள்ளிட்ட சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகித உயர்வு அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடன் வாங்க இருப்பவர்கள் கவனத்திற்கு
இப்போது கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் உடனே வங்கிகளை அணுகி கடன் வாங்குவது நல்லது. விரைவில் எல்லா வங்கிகளும் தங்களது கடன் திட்டங்கள் மீதான வட்டியை உயர்த்தும் அறிவிப்புகளை வெளியிடுவார்கள். அதற்குள் கடன் வாங்கினால் வட்டியும் கொஞ்சம் குறையும்.
ஏற்கனவே ஹோம் லோன் வாங்கியுள்ளீர்கள்?
உங்களை எப்படி வட்டி உயர்வு பாதிக்கும்?
கடன் வாங்கிய அளவு: ரூ. 30,00,000
கால அளவு: 20 வருடம்
நடப்பு வட்டி விகிதம்: 6.8%
தறோதைய மாதாந்திர தவணை (ஈ.எம்.ஐ): ரூ.22,900
புதிய வட்டி விதம்: 7.2%
புதிய ஈ.எம்.ஐ: ரூ.23,620
எவ்வளவு கூடுதல் செலவு: மாதம் 720 ரூபாய்

விளக்கம்
30 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனை, 20 வருட தவணையில் வாங்கியுள்ளீர்கள் என எடுத்துக்கொள்ளுங்கள். தற்போது அதன் வட்டி விகிதம் 6.8 சதவீதம் என்றால் மாத தவணை 22,900 ரூபாய் செலுத்த வேண்டும். அதுவே ஆர்பிஐ அறிவித்துள்ள 0.40 சதவீத வட்டி உயர்ந்து, புதிய வட்டி விகிதம் 7.2 சதவீதம் என உங்கள் வங்கி அறிவித்தால் மாத தவணை 23,620 ரூபாயாக அதிகரிக்கும். கூடுதலாக ஒவ்வொரு மாதமும் 720 சேர்த்துச் செலுத்த வேண்டும்.

வாகனக் கடன்
வாகனக் கடன்: ரூ.100000
கால அளவு: 5 வருடம்
நடப்பு வட்டி விகிதம்: 7%
தற்போதைய மாத தவணை: 1,980 ரூபாய்
புதிய வட்டி விகிதம்: 7.4%
புதிய மாத தவணை: 1,999
கூடுதல் செலவு: 19 ரூபாய்

தனிநபர் கடன்
தனிநபர் கடன் தொகை: ரூ.5,00,000
கால அளவு: 5 வருடம்
நடப்பு வட்டி விகிதம்: 10.49%
தற்போதைய மாத தவணை: 10,744 ரூபாய்
புதிய வட்டி விகிதம்: 10.80%
புதிய மாத தவணை: 10,821
கூடுதல் செலவு: 77 ரூபாய்
RBI Hiked Repo Rate: How It Will Afect Your Loan EMI’s, FD Investors Benefits
RBI Hiked Repo Rate: How It Will Afect Your Loan EMI’s, FD Investors Benefits | ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் உங்க ஈ.எம்.ஐ எவ்வளவு உயரும் தெரியுமா?