அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது இன்று மீண்டும் சற்று சரிவினைக் கண்டுள்ளது.
இது சர்வதேச அளவில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், இந்திய சந்தையில் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக உலகின் முன்னணி பொருளாதார நாடான அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இது அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளது. இது ரூபாயின் மதிப்பு சரிய காரணமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வெறும் 29 ரூபாய் முதலீட்டில் 4 லட்சம் வருமானம்.. எல்ஐசியின் சூப்பர் திட்டம்..!

டாலரின் மதிப்பால் சரிவு
எனினும் தற்போதைக்கு சைடுவேயாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கச்சா எண்ணெய் விலை குறைந்தால் அது ரூபாய்க்கு சாதகமான விஷயமாக அமையலாம். எனினும் தொடர்ந்து டாலரின் அதிகரித்து வரும் நிலையில் அது ரூபாயின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

இதுவும் ஒரு காரணம்
அமெரிக்க மத்திய வங்கியானது வரவிருக்கும் அடுத்த நாணயக் கொள்கை கூட்டத்திலும் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சர்வதேச சந்தைகள் ஆனது ஏற்றத்தில் காணப்படும் நிலையில், இது இந்திய சந்தையில் முதலீடுகள் வெளியேற வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் ரூபாயின் சரிவுக்கு காரணமாக அமையலாம்.

சப்ளை சங்கிலியில் தாக்கம்
மேலும் உக்ரைன் -ரஷ்யா இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் சப்ளை சங்கிலியில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக எரிபொருள் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம்.

எதிர்பார்ப்பு
ஏற்கனவே கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து இந்திய அரசின் இலக்கினை தாண்டி பணவீக்கமானது உச்சம் தொட்டுள்ளது. ஆக இதுவும் ரூபாயின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் ரூபாயின் மதிப்பு 76.40 – 76.90 ரூபாய்க்கு இடையில் வர்த்தகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வளவு சரிவா?
இன்று வார இறுதி வர்த்தக நாள் என்பதால், முதலீட்டாளார்கள் புராபிட் புக்கிங் செய்ய நினைக்கலாம். இதுவும் சந்தை சரிவுக்கு ஒரு காரணமாக அமையலாம். இதற்கிடையில் தான் இந்திய ரூபாயின் மதிப்பானது சரிவினைக் கன்டுள்ளது. தற்போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 0.30% வீழ்ச்சி கண்டு 76.73 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
Rupee may fall on strong dollar: rupee falls to 76.66 against dollar
Rupee may fall on strong dollar: rupee falls to 76.66 against dollar/ரூபாயின் மதிப்பு மீண்டும் சரிவு.. வட்டி அதிகரிப்புக்கு பிறகும் தடுமாற்றம்.. ஏன்!