
கபில்சர்மா நிகழ்ச்சியில் கமல்ஹாசன்
ஹிந்தி டிவியில் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி 'கபில்சர்மா ஷோ'. அந்த நிகழ்ச்சியை மிகவும் நகைச்சுவையாகத் தொகுத்து வழங்குபவர் கபில்சர்மா. எந்த ஒரு ஹிந்திப் படம் வெளிவந்தாலும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் படத்தை பிரமோஷன் செய்வார்கள் பாலிவுட் நடிகர்கள்.
கமல்ஹாசன் நடித்து அடுத்த மாதம் வெளிவர உள்ள 'விக்ரம்' படத்தின் பிரமோஷனுக்காக கமல்ஹாசன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அது குறித்து கபிர்சர்மா, “உங்கள் கனவு நனவாகும் போது… நமது திரையுலகத்தின் சாதனையாளர் கமல்ஹாசனுடன் அற்புதமாக நேரம் போனது. எப்பேர்பட்ட நடிகர், மிகச் சிறந்த மனிதர். எங்கள் ஷோவில் கலந்து கொண்டு சிறப்பித்தற்கு நன்றி சார், உங்கள் விக்ரம் படத்திற்கு வாழ்த்துகள், நன்றி,” என குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கு கமல்ஹாசன், “எனது நேரத்தை உங்களுடன் சிறப்பாக செலவழித்தேன். சிறந்த திறமைசாலிகளுடன் சிறந்த குழுவை வைத்திருக்றீர்கள். உங்களது 20 ஆண்டு பயணத்தின் போது மீண்டும் உங்கள் செட்டிற்கு வர விருப்பம். இடையிலும் நாம் சந்திக்கலாம்,” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.