சென்னை: “இயற்கை ஒவ்வொருவருக்கும் கொடுத்த வரம் அன்னை” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், அன்னையர் தின வாழ்த்துச் செய்தி பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் இன்று (மே 8) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அரசியல் தலைவர்கள், முக்கியப் பிரபலங்கள், பொதுமக்கள் பலரும் அன்னையர் தின வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது தாய் தாயாளு அம்மாவுக்கு முத்தமிடும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அதில், “உயிராய் நமைச் சுமந்து காலமெல்லாம் நனைக்கும் அன்பு மழை, அன்னை.அன்பு, ஆறுதல், அரவணைப்பு, ஊக்கம் என மனிதன் ஏங்கும் உணர்வுகளுக்கு அகராதி சொல்லும் முதல் விடை, அன்னை!
உயிரைத் துளைத்து அன்புக் கடலைப் புகட்டி இயற்கை ஒவ்வொருவருக்கும் கொடுத்த வரம், அன்னை” என்று பதிவிட்டுள்ளார்.