கார் பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழப்பு சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த சாலையில் எதிரே வந்த பைக் மீது எதிர்பாராதவிதமாக அந்த கார் மோதியது.

இந்த விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் விபத்தில் இறந்தவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.