பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் | Visual Story

“தமிழ்நாடா? திராவிட நாடா? என்று கேட்பவர்களுக்குச் சொல்வேன், ஓரணாவில் காலணா தமிழ்நாடு என்று!”

“ஒரு ஜனநாயகச் சமுதாயத்தில் கருத்துக்களைச் சொல்வதற்குத் தடையோ, சுதந்திர உணர்வுகளுக்கு அழிவு தரும் நடைமுறைகளோ கண்டிப்பா இருக்கக்கூடாது!”

“விடுதலைபெறுவதற்கு இன்றியமையாதது, அதற்கான உணர்ச்சிக்கு ஊறு நேரிடாதபடி பார்த்துக்கொள்வதும், உணர்ச்சிபெற்றவர்களின் நிலையை உண்டாக்குவதுமாகும்!”

“கட்டுப்பாடும் ஒழுங்கும் நமக்குக் கட்டாயம் தேவை, இவை சாதாரணமானவைதான். ஆனால், இம்மாதிரி சாதாரண விஷயங்களைக் கொண்டுதான் ஒரு சமூகத்தை எடைபோட முடியும்!”

“சாதியை நாம் எதிர்க்கிறோமென்றால், சமதர்மத்துக்கான சூழலை ஏற்படுத்துகிறோம் என்று அர்த்தம்!”

“சாதிகள் இருந்தே ஆக வேண்டும் என்று எண்ணுபவர்கள், உலகம் எவ்வழியில் செல்கிறது என்பதை அறியாத ஏமாளிகள்!”

“எதிரிகள் தாக்கி தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும். நீங்கள் தாங்கித் தாங்கி வலுவைப் பெற்றுக்கொள்ளுங்கள்!”

“நாள், கோள், நட்சத்திரம், சகுனம், சாத்திரம் அத்தனையும் மனித முயற்சிக்குப் போடப்படுகின்ற தடை கற்கள்!”

“விதியை நம்பி, மதியைப் பறிகொடுத்து, பகுத்தறிவற்ற மனிதர்களாக வாழ்வது மிக மிகக் கேடு!”

“பல திறம்பட்ட கருத்துக்கள் உலவி ஒன்றோடொன்று போரிடும் தன்மை படைத்ததோரின் போர்க்களம்தான் பேச்சு மேடை. அந்தக் களத்திலே பரிசும் உண்டு, பகையும் உண்டு.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.