ஏழுமலையானை தரிசிக்க 7 மணி நேரம் காத்திருப்பு

திருமலை:திருப்பதி ஏழுமலையான் கோயிலில், நேற்று முன்தினம் 62 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதில் 32 ஆயிரத்து 303 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். கோயிலில் தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் ₹4.03 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். கோயிலில் இலவச தரிசன வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 23 அறைகளில் காத்திருக்கின்றனர். இவர்கள் 7 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டதால் ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.