சூப்பர் சரிவில் தங்கம் விலை.. யாருக்கெல்லாம் பலன்.. இன்னும் குறையுமா?

தங்கம் (gold) விலையானது இன்று சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக ஆபரணத் தங்கம் விலையானது தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. இது சர்வதேச சந்தை, இந்திய சந்தை என இரண்டிலும் தடுமாறி வந்தாலும், ஆபரண சந்தையில் சரிவினைக் கண்டிருப்பது ஆர்வலர்களுக்கு மிகச் சரியான சான்ஸ் ஆக பார்க்கப்படுகின்றது.

எனினும் தங்கம் விலையானது இனியும் தொடர்ந்து குறையுமா? இன்று வாங்காலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம்?

தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

பெட்ரோல் பங்க்-ஐ மூடும் நிலையில் ரிலையன்ஸ்.. 2008ல் நடந்த அதே சம்பவம்..!

டாலர் Vs தங்கம்

டாலர் Vs தங்கம்

அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டியை அதிகரித்த பின்னர் தொடர்ந்து, அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்து வருகின்றது. இது ஏற்கனவே பல வருடங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தினை எட்டியுள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது தொடர்ந்து அழுத்தத்திலேயே காணப்படுகின்றது. சொல்லப்போனால் டாலர் மதிப்பானது கடந்த வியாழக்கிழமையன்று 20 வருட உச்சத்தில் காணப்பட்டது.

கவலையளிக்கும் பணவீக்கம்

கவலையளிக்கும் பணவீக்கம்

எனினும் தொடந்து ரஷ்யா உக்ரைன் இடையேயான பிரச்சனையானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பணவீக்கம் என்பது மிகப்பெரிய சவாலான விஷயமாக இருந்து வருகின்றது. இது தொடர்ந்து சப்ளை சங்கிலியில் பிரச்சனையை ஏற்படுத்தி வரும் நிலையில், அது விலை வாசியினை தூண்டுகின்றது. இதனை இன்னும் மெருகேற்றும் விதமாக சீனாவில் இருந்தும் சப்ளை சங்கிலியில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆக இதுவும் பணவீக்கத்தினை இன்னும் ஊக்குவிக்கிறது.ஆக இது தங்கம் விலையானது பெரியளவில் சரியாமல் தடுத்து வருகிறது எனலாம்.

3% மேலாக சரிவில் தங்கம்
 

3% மேலாக சரிவில் தங்கம்

எப்படியிருப்பினும் தங்கம் விலையானது இந்த வாரத்தில் 3 சதவீதத்திற்கும் மேலாக சரிவினைக் கண்டுள்ளது.இது அமெரிக்காவின் வட்டி அதிகரிப்பு நடவடிக்கையினால், டாலர் மதிப்பு உச்சம், பத்திர சந்தை தொடர்ந்து அதிகரித்து வருதல் என பல காரணிகளுக்கு மத்தியில் சரிவினைக் கண்டு வருகின்றது. மேலும் தொடர்ந்து இன்னும் வட்டி விகிதம் இன்னும் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், இதுவும் தங்கம் விலையில் மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது.

கொஞ்சம் பொறுங்கள்

கொஞ்சம் பொறுங்கள்

தொடர்ந்து டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதால் தங்கம் விலையானது மேற்கொண்டு சரிவினைக் காண வழிவகுக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இது வரவிருக்கும் நாட்களில் தங்கத்தில் விலையில் எதிரொலிக்கலாம். ஆக முதலீட்டாளர்கள் தற்போதைக்கு நீண்டகால நோக்கில் தங்கம் வாங்கும் எண்ணத்தை தற்போதைக்கு ஒதுக்கி வைக்கலாம். அப்படி இல்லையெனில் எஸ்ஐபி முறையில் வாங்கி வைக்கலாம்.

அதிக சரிவு தடுக்கப்படலாம்

அதிக சரிவு தடுக்கப்படலாம்

டாலரின் மதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தங்கமானது பாதுகாப்பு புகலிடம் என்ற அஸ்தஸ்தினையும் இழந்து வருகின்றது. எனினும் ரெசசன் அச்சம், ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை, பல்வேறு அரசியல் பதற்றம், நேட்டோவுக்கு எதிராக ரஷ்யாவின் எச்சரிக்கை, சர்வதேச பங்கு சந்தைகளில் திருத்தம் என பல காரணிகளுக்கு மத்தியில் அதிகளவிலான சரிவு என்பது சற்றே குறையலாம்.

டெக்னிக்கல் பேட்டர்ன்

டெக்னிக்கல் பேட்டர்ன்

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. தற்போதைக்கு சற்று ஏற்றம் கண்டாலும், இது இன்னும் குறைந்து பின்னரே அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இந்திய சந்தையிலும் இதே நிலை தான் காணப்படுகின்றது. இதற்கிடையில் நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் பொறுத்திருந்து வாங்கலாம்.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 2.10 டாலர்கள் அதிகரித்து, 1827.28 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கிழாக தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலையையும் உடைத்துள்ளது. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

வெள்ளி விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 0.47% அதிகரித்து, 20,870 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச, அதிகபட்ச விலையையும் உடைக்கவில்லை. எப்படியிருப்பினும் நீண்டகால நோக்கில் பொறுத்திருந்து வாங்கலாம்.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை தடுமாற்றத்திலேயே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து, 50,184 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் தற்போது தங்கம் விலையானது தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையினை போல இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 314 ரூபாய் அதிகரித்து, 59,065 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, உச்ச விலையையும் உடைக்கவில்லை. எனினும் நீண்டகால நோக்கில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில், ஆபரண தங்கம் விலையானது இன்று சற்று குறைந்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 71 ரூபாய் குறைந்து, 4,764 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 568 ரூபாய் குறைந்து, 38,112 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் குறைந்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 78 ரூபாய் குறைந்து, 5,197 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 624 ரூபாய் குறைந்து, 41,576 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,970 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

தங்கம் விலையை போல, ஆபரண வெள்ளி விலையும் இன்று குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 1.60 பைசா குறைந்து, 63.40 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 634 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 1600 ரூபாய் குறைந்து, 63,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் பொறுத்திருந்து வாங்கலாம். இதே ஆபரண தங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும்பட்சத்தில் வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on 13th may,2022: gold prices fall sharply in jewelry market, right time to buy?

Gold prices are staggering in the Comex market. However the price of jewelry gold has dropped. It is also seen as the perfect opportunity to buy.

Story first published: Friday, May 13, 2022, 11:33 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.