புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இந்தியா முன்னோடி: பிரிக்ஸ் மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்!

பிரிக்ஸ்
உயர்மட்டக் கூட்டத்தில் மத்திய
சுற்றுச்சூழல்
, வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் பங்கேற்றார். பருவநிலை மாற்றம் குறித்த இக் கூட்டத்தில் பேசிய அமைச்சர், பருவநிலை மாற்றத்தை கூட்டாக எதிர்கொள்வதற்கும், பணிகளை விரைவுபடுத்துவதற்கான அணுகுமுறைகளை ஆராய்வதற்கும் வலியுறுத்தினார்.

சீன மக்கள் குடியரசின் சுற்றுச்சூழல் அமைச்சர் திரு ஹுவாங் ரன்கியு தலைமையில் நடைபெற்ற பிரிக்ஸ் உயர்மட்டக் கூட்டத்தில் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர், கவனத்துடன் கூடிய பயன்பாடு மற்றும் கழிவுகளைக் குறைத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் நிலையான வாழ்க்கைமுறைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட வலுவான பருவநிலை நடவடிக்கைகளுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

பிரதமர் மோடியின் தொலைநோக்கு மிக்க தலைமையின் கீழ், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நிலையான வாழ்விடங்கள், கூடுதல் காடுகள் மற்றும் மரங்கள் உள்ளிட்டவற்றில் பல வலுவான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து முன்னோடியாக திகழ்கிறது என்பதை சுற்றுச்சூழல் அமைச்சர் பிரிக்ஸ் அமைச்சர்களிடம் தெரிவித்தார்.

பருவநிலை மாற்றம் தொடர்பான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், ஒத்துழைப்பின் உள்ளடக்கங்களை விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும் பிரிக்ஸ் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உறுதிபூண்டனர். மேலும், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய துறைகளில் கொள்கை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை மேற்கொள்ள நாடுகள் ஒப்புக்கொண்டன. கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.