உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘விக்ரம்’. இந்தப் படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீடு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் 6 மணிக்கு தொடங்கியிருக்கிறது. கமல்ஹாசன், அக்ஷரா ஹாசன், விஜய்சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், சிம்பு, இயக்குனர் பா.ரஞ்சித், அன்புச்செழியன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தப் படத்தின் பாடல்கள் பட்டியலை அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். கமல் எழுதி பாடிய ‘பத்தல பத்தல’ பாடல் ஏற்கெனவே மூன்று நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்த நிலையில் மீதி நான்கு பாடல்களும் இன்று வெளியாக உள்ளன. படத்தின் ட்ரைலர் 8 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வை தொகுப்பாளர் டிடி தொகுத்து வழங்கி வருகிறார்.
#Vikram tracks streaming this evening #VikramTrailer at 7pm
Let’s goUlaganayagan @ikamalhaasan @Dir_Lokesh @VijaySethuOffl #FahadhFaasil @Udhaystalin #Mahendran @RKFI @SonyMusicSouth @turmericmediaTM @anbariv @iamSandy_Off @RedGiantMovies_ pic.twitter.com/bLy3nl9nC1
— Anirudh Ravichander (@anirudhofficial) May 15, 2022
விழா ஆரம்பிக்கும் முன்னர் ரஜினி, கமல் பற்றி பேசிய காணொலி ஒளிபரப்பப்பட்டது. இளையராஜா அனுப்பிய வாழ்த்து செய்தி சோதித்துப் பார்க்கப்பட்டது.
1986-ல் கமலஹாசன் நடித்து வெளிவந்த படம் விக்ரம். அதே பெயரிலேயே லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படமும் உருவாகியிருக்கிறது. பஹத் பாசில், விஜய்சேதுபதி என மிரட்டலான காஸ்டிங்கில் ஜூன் 3-ல் படம் திரையரங்குகளில் களமிறங்க உள்ளது.