என்னதான் பல முதலீட்டு திட்டங்கள் என்பது இருந்து வந்தாலும், மக்களிடையே பிக்சட் டெபாசிட் தான் சிறப்பான திட்டமாக பார்க்கப்படுகின்றது.
வட்டி குறைவாக இருந்தாலும் நிரந்தர வருமானம் தரும், சந்தை அபாயம் இல்லாத திட்டங்களாக உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக முதலீட்டுக்கு எந்த பங்கமும் வராது என்பதே பலரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
உண்மையில் இன்றைய காலகட்டத்தில் முதலீட்டில் லாபம் கிடைப்பது இரண்டாம் பட்சமாக இருந்தாலும், முதலீடாவது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில் மக்கள் கருத்தாக உள்ளனர்.
வட்டி அதிகரிப்பு
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது ஐசிஐசிஐ வங்கியின் பிக்சட் டெபாசிட் திட்டம் பற்றித் தான்.
நாட்டின் இரண்டாவது பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கியானது இன்று அதன் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தினை 20 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது. இந்த வட்டி விகிதமானது 2 கோடி ரூபாய்க்குள்ளான டெபாசிட்களுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பானது மே 16, 2022 முதல் அமலுக்கு வந்துள்ளது.

பொது மக்களுக்கு என்ன விகிதம்?
7 – 14 நாட்கள் – 2.50%
15 – 29 நாட்கள் – 2.50%
30 – 45 நாட்கள் – 3%
46 – 60 நாட்கள் – 3%
31 – 90 நாட்கள் – 3%
91 – 120 நாட்கள் – 3.50%
121 – 150 நாட்கள் – 3.50%
151 – 184 நாட்கள் – 3.50%
185 – 210 நாட்கள் – 4.40%
211 – 270 நாட்கள் – 4.40%
271 – 289 நாட்கள் – 4.40%
290 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் – 4.50%
1 வருடம் முதல் 389 நாட்கள் – 5.10%
390 நாட்கள் – 5.10%
15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையில் – 5.10%
18 மாதங்கள் முதல் 2 வருடத்திற்குள் – 5.10%
2 வருடம் 1 நாள் முதல் 3 வருடத்திற்குள் – 5.40%
3 வருடம் 1 நாள் முதல் 5 வருடத்திற்குள் – 5.60%
5 வருடம் 1 நாள் முதல் 10 வருடத்திற்குள் – 5.75%

மூத்த குடிமக்களுக்கு என்ன விகிதம்
7 – 14 நாட்கள் – 3%
15 – 29 நாட்கள் – 3%
30 – 45 நாட்கள் – 3.50%
46 – 60 நாட்கள் – 3.50%
31 – 90 நாட்கள் – 3.50%
91 – 120 நாட்கள் – 4%
121 – 150 நாட்கள் – 4%
151 – 184 நாட்கள் – 4%
185 – 210 நாட்கள் – 4.90%
211 – 270 நாட்கள் – 4.90%
271 – 289 நாட்கள் – 4.90%
290 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் – 5%
1 வருடம் முதல் 389 நாட்கள் – 5.60%
390 நாட்கள் – 5.60%
15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையில் – 5.10%
18 மாதங்கள் முதல் 2 வருடத்திற்குள் – 5.60%
2 வருடம் 1 நாள் முதல் 3 வருடத்திற்குள் – 5.90%
3 வருடம் 1 நாள் முதல் 5 வருடத்திற்குள் – 6.10%
5 வருடம் 1 நாள் முதல் 10 வருடத்திற்குள் – #6.35%

கூடுதல் சலுகை
இவ்வங்கி அதன் ஐசிஐசிஐ வங்கியின் கோல்டன் இயர்ஸ் திட்டத்தினை முன் வைத்துள்ளது. இதன் படி 5 ஆண்டுகளுக்கு மேலான பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வங்கியானது, கூடுதலாக வருடத்திற்கு 0.10% வட்டி விகிதத்தினை வழங்கி வருகின்றது.
ICICI bank hikes FD rates up to 20bps from may 16, 2022
ICICI Bank today hiked interest rates on its fixed deposit plans up to 20 basis points.