
புகையிலை விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகர்கள் மீது வழக்கு
பிரபல பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன், ஷாருக்கான், அஜய் தேவ்கான், ரன்வீர் சிங், அக்ஷய் குமார் ஆகியோர் புகையிலை மற்றும் பான்மசாலா விளம்பரங்களில் நடித்திருக்கிறார்கள். கடும் எதிர்ப்பு கிளம்பவே அக்ஷய்குமார் மட்டும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டதோடு, தான் ஒப்பந்தம் செய்திருந்த கம்பெனிகளுடனான ஒப்பந்தத்தையும் ரத்து செய்தார்.
இந்த நிலையில மும்பையை சேர்ந்த தமன்னா ஹாசீம் என்பவர் மும்பை உயர்நீதி மன்றத்தில் நடிகர்கள் அமிதாப்பச்சன், ஷாருக்கான், அஜய் தேவ்கன் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இளைஞர்களை தீயவழியில் ஈபட வைக்கும் போதை புகையிலை விளம்பரத்தில் நடித்துள்ள இவர்கள் சமுதாயத்துக்கு கேடான செயல்களில ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சொல்வதை நம்பும் ரசிகர்களை இவர்கள் தவறான வழியில் நடத்திச் செல்கிறார்கள். எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று வழக்கின் மனுவில் தமன்னா ஹாசிம் தெரிவித்திருக்கிறார்.