’மகான்’ 100 வது நாள் கொண்டாட்டம்: படக்குழுவினருக்கு ட்ரீட் வைத்த விக்ரம்

’மகான்’ படத்தின் 100 வது நாளை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர் படக்குழுவினர்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் – துருவ் விக்ரம் இணைந்து நடித்த ‘மகான்’ கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. விக்ரம் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான முதல் படம். தீவிர காந்தியவாதி குடும்பத்திலிருந்து பிறந்த விக்ரம் தனக்காக வாழாமல் குடும்பத்திற்காக போலியான வாழ்க்கையை வாழ்கிறார். பின்பு, விக்ரமின் உண்மையான இயல்பு தெரிந்து குடும்பத்தினர் ஒதுக்க, நண்பர்களுடன் பிடித்த வழியில் குடித்தே வாழ்கிறார். இதனை அப்பா-மகன் கதைகளத்தில் உருவாக்கியிருந்தார் கார்த்திக் சுப்பராஜ். 

image

ஆனால், எதிர்பார்த்த வெற்றியைக் குவிக்கவில்லை என்றாலும் விக்ரமின் காஸ்டியூம்களும் மாஸ் லுக்கும் கவனிக்க வைத்தன. மேலும், காந்திய கொள்கைகளை தவறாக காட்டியதாகவும் இப்படத்திற்கு விமர்சனங்கள் எழுந்தன. விக்ரமுடன் சிம்ரன், ஆடுகளம் நரேன், பாபி சிம்ஹா என பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

image

இந்த நிலையில், மகான் வெளியாகி நேற்று 100 வது நாள். இதனை சிறப்பிக்கும் விதமாக நடிகர் விக்ரம் கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்டப் படக்குழுவினருக்கு ட்ரீட் கொடுத்துள்ளார். இதனை கார்த்திக் சுப்பராஜ்  உற்சாகமுடம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.