4ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி வழங்க பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழகம் முழுவதும் 4 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி வழங்க ஆங்கில புலமை வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்கிறது.
ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி வழங்கும் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தி, ஆங்கில புலமை உடையவர்களை அடையாளம் காண கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான ஆசிரியர்களுக்கு வருகின்ற மே 30 மற்றும் 31ம் தேதிகளில் பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.