உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளில் ஈடுப்பட மறுத்த 115 ரஷ்ய படை வீரர்களை அந்த நாட்டு அரசாங்கம் பதவி நீக்கம் செய்துள்ளது.
கடந்த பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய உக்ரைன் ரஷ்யா போரானது 92வது நாளாக இன்றும் நடைப்பெற்று வரும் நிலையில், உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய ராணுவ வீரர்கள் மீது பல்வேறு போர் குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டு வருகிறது.
ரஷ்ய வீரர்களின் இந்த அத்துமீறல்களுக்கு உலக நாடுகள் மட்டுமில்லாமல் அவர்களின் சொந்த நாட்டை சேர்ந்த ரஷ்ய குடிமக்களே பலர் எதிர்ப்பு தெரிவித்த வருகின்றன.

அந்தவகையில் உக்ரைன் மீதான போர் நடவடிக்கைகளில் ஈடுபட ரோஸ்க்வார்டியா என்று அழைக்கப்படும் ரஷ்ய ஜனாதிபதி புடினின் தனிப்பட்ட பாதுகாப்பு படைகளை சேர்ந்த 115 ரஷ்ய ராணுவ வீரர்கள் மறுத்துள்ளனர்.
இதனால் அவர்களை ரஷ்ய அரசாங்கம் அவர்களது பதவிகளில் இருந்து உடனடியாக நீக்கியது.
இந்தநிலையில், ரஷ்ய அரசாங்கத்தின் உத்தரவை எதிர்த்து 115 ராணுவ வீரர்களும் தொடர்ந்த வழக்கை உள்ளூர் நீதிமன்றமும் அதிரடியாக நீக்கியுள்ளது.

இதுத் தொடர்பாக நீதிமன்ற வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில், ராணுவ வீரர்களுக்கு விதிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பணியை செய்ய மறுத்து அவர்களின் பழைய நிலைக்கு திரும்பியதால் அவர்களை பதவியில் இருந்து நீக்கியது சட்டபடி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: எலான் மஸ்க்-கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வீழ்த்தப்படும்: சீனா எச்சரிக்கை!
இந்த வழக்கு விசாரணை ரஷ்ய காகசஸில் உள்ள கபார்டினோ-பால்காரியன் குடியரசின் தலைநகரான நல்ச்சிக்கில் நடைப்பெற்ற நிலையில், இதுத் தொடர்பாக 115 ராணுவ வீரர்களின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் தெரிவித்துள்ள கருத்தில், எனது சார்பு நபர்களின் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை நீதிமன்றம் நீராகரித்து இருப்பது விசாரணையின் நியாயத்தில் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.