2022 ஆம் ஆண்டில் ,கடந்த நான்கு மாதங்களில் புதிய வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் பதிவுகள் பாரிய அளவில் குறைந்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையிலான நான்கு மாதங்களில் 576 கார்கள் மற்றும் 2,205 மோட்டார் சைக்கிள்கள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளன. அக்காலப்பகுதியில் 199 பஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொவிட் 19 தொற்றுநோய் பரவலாக காணப்பட்ட ஆண்டான கடந்த 2021 ஆம் ஆண்டில் 3,495 கார்களும் 8,011 மோட்டார் சைக்கிள்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.