விடுமுறை தினம் – புதுச்சேரி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

விடுமுறை தினமான இன்று புதுச்சேரி கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கடலில் குளித்தும், குதிரையேற்றம், ஒட்டகத்தில் பயணித்தும் மகிழ்ச்சியடைந்தனர்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், இன்று விடுமுறை தினம் என்பதாலும் அதை கொண்டாடும் வகையில் புதுச்சேரிக்கு வந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு மாநில சுற்றுலா பயணிகள் கடற்கரை சாலை மற்றும் பாண்டி மெரினா, பாரடைஸ் கடற்கரை, நீளம் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு கடற்கரைகளில் குவிந்தனர்.
புத்தாண்டு கொண்டாட்டம்.. களை கட்டியது புதுச்சேரி.. கடற்கரை சாலையில்  குவியும் மக்கள் | New Year 2021: Puducherry has a large number of tourists  on beach road to welcome new year ...

சுற்றுலா பயணிகள் கடலில் குளித்தும், ஒருவருக்கு ஒருவரும், குடும்பத்துடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். தொடர்ந்து பல்வேறு கடற்கரைகளில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஒட்டக சவாரி, குதிரை சவாரியில் குழந்தைகள் உற்சாகமாக பயணித்து மகிழ்ந்தனர். இதனால் புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. விடுமுறையை கொண்டாட வந்த சுற்றுலா பயணிகளை பாதுகாக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.