100 வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் ரூ.13 கோடி – போலீஸ் விசாரணை

வங்கி வாடிக்கையாளர்கள் 100 பேருக்கு தலா 13 கோடி ரூபாய் பணம் வங்கியில் இருந்து அனுப்பபப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை தியாகராய நகர் பர்கிட் சாலை சந்திப்பில் HDFC வங்கிக் கிளை இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று காலை அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் 100 பேருக்கு அவர்களது வங்கிக் கணக்குகளில் வங்கியில் இருந்து தலா 13 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே வங்கி அதிகாரிகள் பணம் சென்ற வங்கிக் கணக்குகளை முடக்கம் செய்தனர்.
image
image
தொழிற்நுட்ப கோளாறு காரணமாக இந்த பணப்பரிமாற்றம் நிகழ்ந்திருக்கலாமா? அல்லது வங்கி இணையதளத்தை யாராவது முடக்கி விட்டார்களா? என சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
image
ஆனால் வங்கி சார்பில் முறையான புகார் அளிக்கப்படவில்லை என்றும், அதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பாக வங்கி அதிகாரிகளை தொடர்புகொள்ள முயன்றும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. வங்கி வாடிக்கையாளர் ஒருவர் இந்த சம்பவம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவில் உள்ள வங்கி மோசடி தடுப்பு பிரிவில் தகவல் அளித்ததாகவும், அதனடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.