என் மச்சானை கொலை செய்துவிட்டேன்! போலீசாரிடம் இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்

இந்தியாவில் வேறு மதத்தை சேர்ந்த நபரை தன்னுடைய தங்கை காதல் திருமணம் செய்ததால் அவர்களது அண்ணன் கௌரவ கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் தெலுங்கானாவில் உள்ள ரங்காரெட்டி மாவட்டம், பில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது30). கனா போர் பகுதியை சேர்ந்தவர் செய்யது அஸ்ரி சுல்தான், இருவரும் கல்லூரியில் ஒன்றாக படிக்கும் போது நண்பர்களாக பழகி பின்னர் காதலிக்க தொடங்கினர். கடந்த 7 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் … Read more

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு ரூ.92 கோடி ஒதுக்கீடு!  தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை: நடப்பாண்டு சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தமிழ்நாடு அரசு ரூ.92 கோடி ஒதுக்கீடு செய்து   அரசாணை வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள  44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி  இந்த ஆண்டு தமிழ்நாட்டில், அதுவும் கடற்கரை மாவட்டமான மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆக.10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்த, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைப்பு … Read more

வேப்பேரி தொழில் அதிபர் வீட்டில் ரூ.1 கோடி நகைகளை சுருட்டிய வேலைக்காரன்

சென்னை: வேப்பேரி ஈ.வெ.கி. சம்பத் சாலை பகுதியில் வசித்து வருபவர் விகாஷ். தொழில் அதிபரான இவரது வீட்டில் பீகாரைச் சேர்ந்த கரண் என்ற வாலிபர் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி வீட்டை விட்டு சென்ற கரண் நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக கூறி வெளியேறினார். ஆனால் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தொழில் அதிபர் விகாஷ் வீட்டில் இருந்த நகைகளை ஆய்வு செய்தார். அப்போது ரூ. 1 கோடி மதிப்பிலான தங்கம் … Read more

பீகாரில் 3 ஆயிரம் கிலோ மீட்டர் நடைபயணம் சென்று பொதுமக்களை சந்திக்கும் பிரசாந்த் கிஷோர்

லக்னோ: தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கடந்த மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மூத்த தலைவர்களுடன் பலமுறை ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற பல்வேறு திட்டங்கள் அடங்கிய அறிக்கையினை வழங்கினார். அவரது யோசனை படி காங்கிரசில் அதிரடி நடவடிக்கை எடுக்க சோனியா காந்தி முடிவு செய்தார். இந்த நிலையில் பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பதற்கான முயற்சியும் … Read more

ஜெர்மனியில் 30 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட பிரதமர் மோடியின் புகைப்படம் இணையத்தில் வைரல்

பெர்லின் : கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் பல்வேறு நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. உக்ரைன்-ரஷிய போர் காரணமாக ஐரோப்பிய பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் அவர் நேற்று முன்தினம் ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றார். அங்கு அவர் அந்த நாட்டின் பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸை சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் ஜெர்மனி பயணத்தை … Read more

காலை நேர வர்த்தகத்தில் 990 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்த சென்செக்ஸ் பிற்பகலில் கிடுகிடுவென சரிவு..!!

மும்பை: காலை நேர வர்த்தகத்தில் 990 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்த சென்செக்ஸ் பிற்பகலில் கிடுகிடுவென சரிந்தது. காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 998 புள்ளிகள் அதிகரித்து 56,567 புள்ளிகளை தொட்டு இருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு மேல் சரிய தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 39 புள்ளிகள் குறைந்து 55,630 புள்ளிகளானது.

தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு எதிரான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு எதிரான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது. உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பணமதிப்பிழப்பு காலத்தில் தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் கணக்கில் வராத பல கோடி ரூபாய் சிக்கியது. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு காண்டிராக்டர் சேகர் ரெட்டி மற்றும் அவரது உறவினர், ஆடிட்டர் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில்  147 கோடி … Read more

விழுப்புரம்: சோப்பு நீரில் ஊற வைக்கப்படும் மாம்பழங்கள் – மக்கள் அதிர்ச்சி

மேற்புறத் தோலில் கருப்பாக இருக்கும் மாம்பழங்களை சோப்புத் தண்ணீரில் ஊறவைத்து சுத்தம் செய்வது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் மாம்பழ விளைச்சல் அதிகம் இருந்தாலும் பூச்சி தாக்குதலால் மாம்பழங்களின் தோலின் மீது ஆங்காங்கே கருப்பாக காணப்படுகிறது. இதனால் அந்த மாம்பழங்களை வாங்க, மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை எனத் தெரிகிறது. இதனால் துணிகளை ஊறவைக்கும் சோப்பு பவுடரில் மாம்பழங்களை 10 நிமிடங்கள் ஊறவைத்து, தேங்காய் நார் உதவியுடன் தேய்த்து அதன் மேற்புறத்தில் … Read more

சேகர் ரெட்டி மீதான வழக்கை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

தொழிலதிபர் சேகர் ரெட்டி மீதான சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம். தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது உறவினர், ஆடிட்டர் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 147 கோடி ரூபாய் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளும், சுமார் 34 கோடி ரூபாய்க்கு புதிய 2,000 ரூபாய் நோட்டுகளும், 178 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதில் `பண … Read more

ஜோசப்புக்கும் விசித்திரனுக்கும் பெரிய வித்தியாசமில்லை… தமிழில் ஒரு நல்ல ரீமேக்!

ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றி அடைந்த சினிமா ‘ஜோசப்’. இத்திரைப்படம் தமிழில் ‘விசித்திரன்’ என்ற பெயரில் ரீ மேக் செய்யப்பட்டுள்ளது. இந்த சினிமாவை பத்மகுமார் இயக்கியிருக்கிறார். ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்திருக்கும் இதில் பூர்ணா, மதுஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். ஜிவி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இயக்குநர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் இத்திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறது. தன் தனிப்பட்ட வாழ்வில் நடந்த காதல் தோல்வியால் மனமுடைந்த கான்ஸ்டபிள் மாயன், முழு நேரம் மதுவில் மூழ்கியிருக்கிறார். வி.ஆர்.எஸ் பெற்று ஓய்வில் இருக்கும் … Read more