2020 ஆண்டில் ஆகக்ககூடுதலான தொகையை வட்டியாக செலுத்திய நாடாக இலங்கை காணப்பட்டது – நிதியமைச்சர்

அரச வருமானத்திற்கு அமைவாக ஆகக்ககூடுதலான தொகையை வட்டியாக செலுத்திய நாடாக 2020 ஆண்டில் இலங்கை காணப்பட்டதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். 2019ஆம் ஆண்டுகளுக்கு அமைவாக கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கம் கடனுக்காக செலுத்திய வட்டித்தொகை என்ன என்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு நிதி அமைச்சர் பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 2019ஆம் ஆண்டு, அதிக வருமானம் பெறும் நபர்களை இலக்காகக் கொண்டு அல்லாமல், அனைத்து வரி செலுத்தும் மக்களையும் … Read more

பள்ளிப்பருவத்தில் நடிகர் ரஜினிகாந்த்… இதுவரை வெளிவராத மாஸ் புகைப்படம்

Tamil Cinema Actor Rajinikanth School days Photo Viral : இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் இவர், 1975-ம் ஆண்டு வெளியான அபூர்வராகங்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானர். தொடர்ந்து வில்லன் கேரக்டரில் சில படங்களில் நடித்த ரஜினிகாந்த பைரவி படத்தில் தனி ஹீரோவாக உயர்ந்தார். அதனைத் தொடர்ந்து நாயகனாக பல வெற்றிப்படங்களை கொடுத்த ரஜினிகாந்த கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த … Read more

புதுக்கோட்டையில் பரபரப்பு சம்பவம்.. பிரியாணி வாங்கி சாப்பிட்ட 11 பேருக்கு வாந்தி, மயக்கம்.!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் சித்திரை வேல். இவர் தனக்கு சொந்தமான வீட்டில் தற்போது பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறார். அத்துடன் மேல்தளம் அமைப்பதற்காக கட்டிட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வேலை செய்பவர்களுக்கு வீட்டு உரிமையாளர் அறந்தாங்கியில் உள்ள ஒரு பிரியாணி கடையில் இருந்து 40 பிரியாணி பொட்டலங்களை வாங்கி கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட கட்டிட தொழிலாளர்கள் 11 பேரும் வாந்தி மயக்கம் எடுத்து மயக்கம் அடைந்துள்ளனர். … Read more

மருட்சி! – சிறுகதை

நள்ளிரவு இரண்டு மணி, ஆங்கங்கே, விளக்குகள் மின் கம்பத்தில் மினுமினுத்தன.. காற்றின் வேகம் சற்று கூடவே, சிறு தூறலாக இருந்த மழை, சட்டென்று வேகம் எடுக்க, இதற்கு மேல் வண்டியை ஓட்ட முடியாமல், தடுமாறி கொண்டே, அருகே இருக்கும் shed போட்டு கவர் செய்த பஸ் ஸ்டாண்ட் மேட்டில் வண்டியை ஏற்றிவிட்டு ஹெல்மெட் கழற்றி, தலையை ஆட்டி கொண்டே சுற்றும், முற்றும் பார்த்து விட்டு பஸ் ஸ்டாண்டில் இருந்த சிமென்டில் கட்டப்பட்டிருந்த இருக்கையில் கார்த்திக் அமர்ந்து கொண்டு, … Read more

மாணவியிடம் அத்துமீறி விட்டு தப்பி ஓடிய இளைஞர்…4 கி.மீ. தூரம் விரட்டிச் சென்று மடக்கி பிடித்த சக மாணவர்கள்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கல்லூரி மாணவியிடம் அத்துமீறிவிட்டு காரில் தப்பியோட முயன்ற நபரை, சக மாணவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று பிடித்த வீடியோ வெளியாகியுள்ளது. தனியார் கல்லூரியில் பயின்று வந்த அந்த மாணவி, தனது நண்பர்களுடன் கல்லூரிக்கு அருகேயுள்ள ஹோட்டலில் உணவருந்தியுள்ளார். அப்போது, பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்த நேக்காமண்டபத்தைச் சேர்ந்த ஸ்பார்ஜன் என்ற நபர் மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. முதலில் இதனை கண்டுகொள்ளாத மாணவி, இயற்கை உபாதை கழிக்க … Read more

ஹஜ் புனிதப் பயணப் புறப்பாட்டு இடமாகச் சென்னை: உறுதி அளித்த மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி

சென்னை: ஹஜ் புனிதப் பயணப் புறப்பாட்டு இடமாகச் சென்னை பரிசீலிக்கப்படுமென உறுதி அளித்த மத்திய அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியுள்ளதாவது: ”2023-இல் இருந்து ஹஜ் புனிதப் பயணப் புறப்பாட்டு இடமாகச் சென்னை பரிசீலிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளமைக்காக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு நன்றி. இனி வரும் காலங்களில், எந்தச் சூழ்நிலையிலும் ஹஜ் புனிதப் பயணப் புறப்பாட்டு இடமாகச் … Read more

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு டெல்லியில் இலவச பஸ் பாஸ் அறிமுகம்

புதுடெல்லி: கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை டெல்லி அரசு நேற்று தொடங்கியது. டெல்லி தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்டுமானத் தொழிலாளர்கள் சிலருக்கு துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இலவச பஸ் பாஸ்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசு கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் பயன் அடைவர். டெல்லியில் மட்டும் 10 லட்சம் தொழிலாளர்கள் … Read more

பீகாரில் பி.கே., போடும் பலே கணக்கு: நடந்து சென்று ஆட்சியை பிடிக்க திட்டமா?

பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் அடங்கிய மிகப்பெரிய கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர், சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து அக்கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது பற்றியும், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு காங்கிரஸ் கட்சிக்கான ஒரு செயல்திட்டத்தை பற்றியும் விளக்கினார். தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியில் சேரவிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், கட்சியில் சேர பிரஷாந்த் கிஷோர் மறுப்பு தெரிவித்து விட்டார். அதன் தொடர்ச்சியாக, … Read more

உகாண்டாவில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து – 20 பேர் பரிதாப பலி!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். போர்ட் போர்டல் நகரிலிருந்து அந்நாட்டின் தலைநகர் கம்பாலா-வுக்கு, 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. போர்ட் போர்டல் நகருக்கு அருகே திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையில் தறிக்கெட்டு ஓடியது. தொடர்ந்து, சாலையோரத்தில் இருந்த தேயிலை தோட்டத்துக்குள் பாய்ந்த பஸ் பலமுறை உருண்டு விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 20 பேர் சம்பவ … Read more

பழங்குடியினர் கைவினை பொருட்கள் கண்காட்சி: தேசிய அளவில் முதலிடம் பிடித்த தோடர் பழங்குடியின பெண்களுக்கு உற்சாக வரவேற்பு!

ஒடிசாவில் நடைபெற்ற பழங்குடியினர் கைவினைப் பொருட்கள் கண்காட்சியில், தேசிய அளவில் முதலிடம் பெற்ற நீலகிரியைச் சேர்ந்த தோடர் பழங்குடியின பெண்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் மத்திய அரசின் பழங்குடியினர் அமைச்சகத்தின் சார்பில் பழங்குடியினர் கைவினை பொருட்கள் விற்பனை திருவிழா ஒடிசாவில் நடைபெற்றது. அதில், நாட்டில் உள்ள 62 பழங்குடியினர்களின் கைவினைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் தோடர் பழங்குடியின பெண்கள், கைகளால் நெய்த பூத்தையலுக்கு முதலிடம் கிடைத்தது. சான்றிதழ்களையும் பரிசுக் … Read more