புலி சிறுத்தைகளுக்கு மத்தியில் உலாவந்த மாளவிகா மோகனன்

பேட்ட படம் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்த மலையாள நடிகை மாளவிகா மோகனன், அடுத்தது விஜய்யுடன் மாஸ்டர், தனுஷுடன் மாறன் என முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார். தெலுங்கு, இந்தியிலும் கூட படங்களில் நடித்து வரும் மாளவிகா படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஜாலியாக வெளியூர்களுக்கு கிளம்பி விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். குறிப்பாக மாலத்தீவுக்கு அடிக்கடி விசிட் அடிக்கும் மாளவிகா, அங்கு கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தான் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்களையும அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

இந்தநிலையில் அந்த சுற்றுலாவில் ஒரு சிறு மாற்றமாக நமது நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தடோபா வனவிலங்கு சரணாலயத்திற்கு தனது தோழிகள் இருவருடன் விசிட் அடித்துள்ளார் மாளவிகா. இந்த சரணாலயத்தில் புலிகள் மற்றும் சிறுத்தைகள் இருப்பதை கேள்விப்பட்டதில் இருந்தே இங்கே சபாரி போக வேண்டும் என்பது தனது ஆசையாக இருந்ததாக கூறியுள்ள மாளவிகா, இந்த வன பயணத்தின்போது இரண்டு புலிகளையும் ஒரு சிறுத்தையையும் மிக அருகில் பார்த்ததாக மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும் அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மாளவிகா மோகனன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.