மே மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,40,885 லட்சம் கோடியாக உள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.97,821 ஆக இருந்த நிலையில் தற்போது 44% அதிகரித்துள்ளது.
ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டத்தில் இருந்து 4வது முறையாக மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் 1.40 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.
மார்ச் 2022 முதல் தொடர்ச்சியாக 3வது மாதமாக ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்துள்ளது. மே 2022ல் இறக்குமதி பொருட்களின் மீதான வருவாய் இந்த மாதம் 43% அதிகரித்துள்ளது.
மாநிலங்களுக்கு மே 31 வரை ஜிஎஸ்டி நிலுவை தொகை விடுவிப்பு: மத்திய அரசு அறிவிப்பு!

ஜிஎஸ்டி வரி வசூல்
மே மாதத்தின் வலுவான வரி வசூல் மத்திய அரசின் நிதி நிலையை மேலும் வலிமைப்படுத்த உள்ளது. இதன் மூலம் மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த வரிக் குறைப்பு மூலம் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும்.

மே மாதம்
மே மாத இந்தியா முழுவதும் நடந்த வர்த்தகத்தில் சிஜிஎஸ்டி ரூ.25,036 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ.32,001 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.73,345 கோடி அளவிலான வரி வசூலாகியுள்ளது. இதன் மூலம் மத்திய மற்றும் மாநிலங்களுக்கான மொத்த வருவாய் முறையே ரூ.52,960 கோடி மற்றும் ரூ.55,124 கோடி ஆக உள்ளது.

இழப்பீடு நிதி
மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு நிதியில் ரூ.25,000 கோடி மட்டுமே இருந்த போதிலும், மே 31, 2022 வரையிலான காலக்கட்டத்திற்து மாநில அரசுக்கு சுமார் ரூ. 86,912 கோடி அளவிலான இழப்பீட்டுத் தொகையைத் செலுத்தியுள்ளது. இதன் மூலம் ஒன்றிய அரசு அறிவித்துள்ள 5 ஆண்டு இழப்பீடு தொகையில் ஜூன் 2022 மாத தொகை மட்டுமே நிலுவையில் உள்ளது.

5 ஆண்டு இழப்பீடு சலுகை
மாநிலங்கள் தங்கள் வளங்களை நிர்வகிப்பதற்கும் அவர்களின் திட்டங்கள், குறிப்பாக மூலதனச் செலவுகள், நிதியாண்டில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கும் 5 ஆண்டு இழப்பீடு உதவியை மத்திய அரசு அளிக்க முடிவு செய்தது.
GST collections Rs 1.41 lakh crore in May; 4th time crossing ₹1.40 lakh crore mark
GST collections Rs 1.41 lakh crore in May; 4th time crossing ₹1.40 lakh crore mark ஜிஎஸ்டி கலெக்ஷன்: 4வது முறையாக ரூ.1.40 லட்சம் கோடியை தாண்டியது..!