கட்டாயம் ஆபீஸ்-க்கு வரனும்.. இல்லாட்டி இப்பவே வேலையை விட்டு கிளம்பலாம்..!

இந்தியாவில் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் ஊழியர்கள் அலுவலகத்திற்கு அழைத்தால் வேலையை ராஜினாமா செய்கிறார்கள் என்பதால் ஊழியர்களை அழைக்கவே நிறுவனங்கள் தயங்கி வருகிறது.

இந்த நிலையில் ஒரு நிறுவனத்தின் சிஇஓ சற்றும் யோசிக்காமல் அனைத்து ஊழியர்களும் அலுவலகத்திற்கு வர வேண்டும் இல்லையெனில் வேலையை விட்டு கிளம்புங்க என வெளிப்படையாக அறிவித்துத் தனது ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இது யாராக இருக்கும்..? முடிந்தால் சரியாகக் கணித்துச் சொல்லுங்க பார்ப்போம்…

ஐடி துறை ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 30% வரை சம்பளம் அதிகரிக்கலாம்.. எந்த நாட்டில் ?

வொர்க் ப்ரம் ஹோம்

வொர்க் ப்ரம் ஹோம்

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்காக லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நேரத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இது கிட்டதட்ட 2.5 வருடம் நீட்டித்த நிலையில் தற்போது ஊழியர்களை அழைப்பதில் பெரும் பாதிப்பு உருவாகியுள்ளது.

டெஸ்லா எலான் மஸ்க்

டெஸ்லா எலான் மஸ்க்

இந்நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் அனைத்து ஊழியர்களையும் உடனடியாக அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற உத்தரவிட்டு உள்ளார். இல்லையெனில் வேலையை விட்டு வெளியேறும் படி அறிவித்துள்ளார். இதுகுறித்து எலான் மஸ்க் ஈமெயில் தற்போது டிவிட்டரில் வைரலாகியுள்ளது.

டெஸ்லா நிர்வாகம்
 

டெஸ்லா நிர்வாகம்

டெஸ்லா நிர்வாகத்தால் இனி அதன் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எலோன் மஸ்க் கூறியுள்ளார். அமெரிக்காவில் கோவிட்-19 தொற்று எண்ணிக்கைகள் பெரிய அளவில் குறைந்த நிலையில் அலுவலகங்கள் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் எலான் மஸ்கின் இந்த அறிவிப்பு பெரும் மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

40 மணிநேரம்

40 மணிநேரம்

வீட்டில் இருந்து பணியாற்றும் டெஸ்லா ஊழியர்கள் வாரத்தில் குறைந்தது 40 மணிநேரம் பணியாற்றி இருக்க வேண்டும் இல்லையெனில் பணியை விட்டு வெளியேறலாம் எனவும், இது டெஸ்லா பேக்டரி ஊழியர்கள் பணியாற்றும் நேரத்தை விடவும் குறைவு எனச் சுட்டிக்காட்டியுள்ளார் எலான் மஸ்க்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

No more Work from Home: Tesla CEO Elon Musk Says Spend 40 Hours Per Week in Office or Leave job

No more Work from Home: Tesla CEO Elon Musk Says Spend 40 Hours Per Week in Office or Leave job கட்டாயம் ஆபீஸ்-க்கு வரனும்.. இல்லாட்டி இப்பவே வேலையை விட்டு கிளம்பலாம்..!

Story first published: Thursday, June 2, 2022, 18:53 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.