ஸ்டாலினும் ஜிஎஸ்டியும் – சசிகலா… புதுக்கட்சி – அதிமுக Vs பாஜக… 'விக்ரம்' மார்க்|விகடன் ஹைலைட்ஸ்

ஸ்டாலின் கேட்டதால்தான் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டதா?

முதல்வர் ஸ்டாலின் – பிரதமர் மோடி

மே 31-ஆம் தேதி வரை மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையையும் மத்திய அரசு விடுவித்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு அரசுக்கு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை 9,602 கோடியையும் மத்திய அரசு விடுவித்துள்ளது.

மத்திய அரசின் திட்டங்களைத் தொடங்கி வைக்கச் சென்னை வந்திருந்த பிரதமர் முன் முதல்வர் ஸ்டாலின் ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை மற்றும் கூட்டாட்சி குறித்து பேசியதன் விளைவாகவே இது நடந்ததாகவும், இதன்மூலம் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்குமான காப்பானாக ஸ்டாலின் திகழ்வதாகவும் திமுகவினர் காலரைத் தூக்கிவிட்டுக்கொள்வது, பாஜகவினரை ஏகத்துக்கும் கடுப்பேற்றி உள்ளது.

இது தொடர்பாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், இரு கட்சி ஆதரவாளர்களும் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை விடுவிப்பு தொடர்பாக மிக உக்கிரமாக மோதிக் கொண்டிருக்கும் நிலையில், உண்மையில் இரு தரப்பினரின் அதிகாரபூர்வ கருத்து என்ன என்பதை தெரிந்துகொள்ள க்ளிக் செய்க…

கழுகார் அப்டேட்ஸ்: வீடு அபகரிப்பு புகாரில் திமுக புள்ளி முதல் சசிகலா பெயரில் புதுக்கட்சி வரை…

சசிகலா

பட்டாசு மாவட்டத்தின் சீனியர் அமைச்சரின் மகள்வழிப் பேத்திக்கு சென்னையில் திருமணம் நடைபெறவிருக்கிறது. இதற்காக முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்ட பத்திரிகையில், தன் சொந்த மகன்களின் பெயர்களையே புறக்கணித்துவிட்டாராம் அமைச்சர். மகன்களின் அரசியல் செயல்பாடு பிடிக்காமல், அவர்களை ‘சூர்யவம்சம் சின்ராசு’ போல ஒதுக்கிவைத்திருக்கும் அமைச்சர், அழைப்பிதழில் மருமகனின் பெயரை மட்டுமே அச்சிட்டிருப்பதோடு, பத்திரிகை கொடுக்கும் சாக்கில் கட்சி முக்கியப் பிரமுகர்களுக்கும் அவரை அறிமுகப்படுத்திவைக்கிறாராம். தனக்குப் பிறகு தன் மருமகனை அரசியல் வாரிசாகக் களமிறக்க முடிவு செய்திருப்பதாலேயே இந்த ‘மூவ்’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். மருத்துவரான அந்த மருமகன் கோபாலபுரம் வரை அறிமுகமாகிவிட்டதால், விரைவில் அவரை அரசியல் மேடைகளில் பார்க்கலாம் என்கிறார்கள் அமைச்சருக்கு நெருக்கமானவர்கள்!

அடுத்ததாக ‘சசிகலா பெயரில் புதுக்கட்சி’ உள்பட கழுகார் தரும் இன்னும் பல அப்டேஸ்களைப் படிக்க க்ளிக் செய்க…

“என்னோட ஒரு நாள் சம்பளம்தான் ஐ.டி-யில ஒரு மாச சம்பளம்…!” – கலக்கும் கரூர் இளைஞர்

பூக்கடையில் நவீன்ராஜ்

பொறியியல் படிப்பு, பெங்களூரில் வேலை, கைநிறைய சம்பளம் என்று கனவு கண்டவர்தான் நவீன்ராஜ்.

ஆனால், குடும்பச் சூழல் காரணமாக பூக்கடைத் தொழிலைக் கையில் எடுத்தார். தற்போது, “என்னோட ஒரு நாள் சம்பளம்தான் ஐ.டி-யில ஒரு மாச சம்பளம்…!” என கெத்தாகச் சொல்லும் இந்த கரூர் இளைஞரின் பிசினஸ் கதையைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க…

பொன்னையன் திடீர் பாய்ச்சல் ஏன்? காரணம் சொல்லும் பாஜக

முன்னாள் அமைச்சர் பொன்னையன் அ.தி.மு.க

“தமிழ்நாடு பா.ஜ.க மக்களுக்காக குரல் எழுப்பவில்லை. தமிழ்நாடு பா.ஜ.க நிலைப்பாடு குறித்து சமூக ஊடகங்கள் மூலம் அ.தி.மு.க-வினர் வெளிப்படுத்த வேண்டும்!” என அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் பொன்னையன் கூறியது அரசியல் அரங்கில் பேசு பொருளாக மாறியது.

கூட்டணி தர்மம் என்றுகூட பார்க்காமல், பொன்னையன் இப்படி பேசிவிட்டாரே என பாஜக தரப்பில் ஏகத்துக்கும் கொந்தளிப்பு.

இந்த நிலையில், “ராஜ்ய சபா எம்.பி பதவி கிடைக்காததால் பொன்னையன் அதிருப்தியில் இருக்கிறார். அதனால்தான் இப்படி பேசுகிறார் எனச் சொல்லும் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, பதிலுக்கு அதிமுகவின் சட்டமன்ற செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அவரது ஆவேச பேட்டியைப் படிக்க க்ளிக் செய்க…

Ilaiyaraaja: எம்.ஜி.ஆருக்காக இசையமைக்கவேண்டிய படம்;  10 சுவாரஸ்யத் தகவல்கள்!

இளையராஜா

அன்னக்கிளி’ மூலம் 1976-ல் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்த இசைஞானி இளையராஜா அகவையில் இன்று எண்பதைத் தொடுகிறார். இதனையொட்டி சமீபத்தில் அவர் திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடத்தினார்.

இன்றும் பலரின் இரவை தன் இசையால் நிரப்பிக் கொண்டிருக்கும் இளையராஜாவின் வாழக்கைப் பாதையில் நிகழ்ந்த சுவாரஸ்யங்களில் சில இதோ…

‘எம்.ஜி.ஆரா வாழ 20 லட்சம் செலவு!’

நாமக்கல் எம்.ஜி.ஆர்

சின்ன எம்.ஜி.ஆர், கறுப்பு எம்.ஜி.ஆர்களுக்கு இப்போது ஓய்வுக்காலம். இந்த இடைவெளியில்தான் நாமக்கல் எம்.ஜி.ஆர் ‘உழைக்கும் கைகள்’ என்று ஒரு படத்தில் நடித்திருப்பதோடு செய்தித்தாள் விளம்பரம், போஸ்டர்கள் என்று பப்ளிசிட்டி தூள் பறந்தது.

“என் நிஜப் பெயர் சுப்பிரமணி. சின்ன வயசுல இருந்தே எம்.ஜி.ஆர் ரசிகன். காலேஜ் டைம்ல அவர் மாதிரியே வேஷம் போட்டு மாறுவேடப் போட்டில மேடை ஏறிப் பேசினேன். அதுக்குப் பெரிய வரவேற்பு கிடைச்சது. கூடவே பாராட்டி 500 ரூபா பணமும் கிடைச்சது. அன்னைல இருந்து இன்னைக்கு வரைக்கும் எம்.ஜி.ஆர் மாதிரியே வாழ்ந்துட்டு இருக்கேன். இதுபோக பழைய கலைப்பொருள்களை வாங்கி விக்கிறது, பழைய தேக்கு மரங்களை வாங்கி விக்கிறது, சமையல் மஞ்சள் தூள் விற்பனைன்னு நானும் தொழிலதிபர்தான் தம்பி!

இத்தனை தொழில் பண்றவன் வாத்தியாரோட நடிப்புத் தொழிலை விட்டுடுவேனா?” என்ற நாமக்கல் எம்.ஜி.ஆர் அடுத்து சொன்ன விஷயம் செம ஆச்சர்யம்!

மேலும் படிக்க க்ளிக் செய்யவும்…

‘விக்ரம்’ படத்திற்கு விகடனின் மார்க் என்ன தெரியுமா?

‘விக்ரம்’ கமல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘விக்ரம்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் நாளை வெளியாகவிருக்கிறது. இது பழைய ‘விக்ரம்’ படத்தின் இரண்டாம் பாகம் என்றும், லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான ‘கைதி’க்கும் இதற்கும் தொடர்பு இருக்கும் என்றும் இணையத்தில் பல்வேறு செய்திகள் உலாவுகின்றன.

இப்படியான நிலையில், 1986-ல் வெளியான `விக்ரம்’ படத்திற்கு விகடனின் மார்க் என்ன தெரியுமா? 15.6.86 தேதியிட்ட இதழில் வெளியான விகடனின் `விக்ரம்’ விமர்சனம் இதோ…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.