அதானி-க்கு ஆஸ்திரேலியா.. அம்பானி-க்கு பிரிட்டன்..!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, கௌதம் அதானி போலவே தனது வர்த்தகத்தை வெளிநாடுகளில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளார். இதற்காக முகேஷ் அம்பானி தேர்வு செய்த நாடு தான் பிரிட்டன்.

லாக்டவுன் நேரத்திலேயே முகேஷ் அம்பானி இதற்கான திட்டத்தைத் தீட்டி இருந்தாலும், சரியான வாய்ப்பு என்பது இப்போது தான் கிடைத்துள்ளது என்று சொல்ல வேண்டும்.

15% உயர்ந்து உச்சத்தை தொட்டது டெல்லிவரி பங்குகள்

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி பிரிட்டன் நாட்டில் வர்த்தகத்தைத் துவங்குவதற்கு முன்பு தனக்காக ஒரு வீட்டை வாங்கியதில் இருந்து துவங்கினார். இந்தியாவில் லாக்டவுன் அறிவித்த போது முகேஷ் அம்பானி குடும்பத்துடன் பிரிட்டனில் தான் பல மாதம் தங்கியிருந்தார்.

பிரிட்டன்

பிரிட்டன்

இந்தப் பிரிட்டன் பயணம் தான் அந்நாட்டில் வீட்டை வாங்கவும், முதலீடு செய்யவும், வர்த்தகத்தை உருவாக்கும் எண்ணம் முகேஷ் அம்பானிக்கு தோன்றியது என்றே சொல்லலாம். அந்த அளவிற்குப் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய வர்த்தகம் மீது முகேஷ் அம்பானி தீவிரமாக உள்ளார்.

முதல் முயற்சி தோல்வி
 

முதல் முயற்சி தோல்வி

சில மாதங்களுக்கு முன்பு ஐரோப்பிய சந்தையில் இயங்கி வந்த டி-மொபைல் நிறுவனத்தின் டிமொபைல் வர்த்தகத்தைக் கைப்பற்ற முயற்சி செய்து தோல்வியைச் சந்தித்தர். இதன் பின்பு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது வலிமையாக இருக்கும் ரீடைல் வர்த்தகத்தில் ஒரு நிறுவனத்தைக் கைப்பற்ற தயாராகியுள்ளது.

பூட்ஸ் நிறுவனம்

பூட்ஸ் நிறுவனம்

ரீடைல் மருந்து மற்றும் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் பூட்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்றும் போட்டியில் பெரிய அளவில் முன்னேறியுள்ளது. சுமார் பிரிட்டன் உட்பட 6 நாடுகளில் வர்த்தகம் செய்யும் பூட்ஸ் நிறுவனத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அப்போலோ குளோபல் மேனேஜ்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து கைப்பற்றுகிறது.

ஈசா பிரதர்ஸ் உடன் போட்டி

ஈசா பிரதர்ஸ் உடன் போட்டி

இதற்காக இந்தக் கூட்டணி இன்றுக்குள் விலை விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க உள்ளது. பூட்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்ற இந்திய பிரிட்டன் பில்லியனர்களான ஈசா பிரதர்ஸ் போட்டிப்போட்டு வரும் நிலையில் யார் கைப்பற்றப் போகிறார் என்பதில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

REC சோலார்

REC சோலார்

சில மாதங்களுக்கு முன்பு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நியூ எனர்ஜி நிறுவனம் நார்வே நாட்டின் REC சோலார் நிறுவனத்தைப் பெரும் தொகைக்குக் கைப்பற்றி ஐரோப்பிய சந்தைக்குள் நுழைந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Mukesh Ambani owned Reliance Industries trying to expand their empire in Britain and EU

Mukesh Ambani owned Reliance Industries trying to expand their empire in Britain and EU அதானி-க்கு ஆஸ்திரேலியா.. அம்பானி-க்கு பிரிட்டன்..!

Story first published: Friday, June 3, 2022, 14:59 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.