சாம்ராட் பிருத்விராஜ் படத்துக்கு வரி விலக்கு அளித்த 3 பாஜக ஆளும் மாநிலங்கள்

மும்பை

பாஜக ஆட்சி செய்யும் 3 மாநிலங்களில் சாம்ராட் பிருத்விராஜ் திரைப்படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பாஜக ஆட்சி செய்யும் பல்வேறு மாநிலங்களில் சமீபத்தில் வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது.   அவ்வகையில் இன்று வெளியாகும் அக்‌ஷய்  குமார் நடிக்கும் சாம்ராட் பிருத்விராஜ் திரைப்படத்துக்கு பாஜக ஆளும் 3 மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக உள்ள அக்‌ஷய் குமார்  நடித்துள்ள வரலாற்று திரைப்படமான “சாம்ராட் பிருத்விராஜ்” தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை சந்திரபிரகாஷ் திவிவேதியால் இயக்க யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் ராஜபுத்திர மன்னரான பிருத்விராஜ் சவுஹானின் வாழ்க்கையைப் பற்றிய பிரஜ் மொழி காவியத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

பிருத்விராஜ் சவுஹானாக அக்‌ஷய் குமார் பிருத்விராஜ் சௌஹானாக நடிக்க சன்யோகிதா என்ற கதாபாத்திரத்தின் மூலம் இந்தி திரைப்படத்தில்  அறிமுகமாகிறார். மேலும் சஞ்சய் தத் , சோனு சூட் மற்றும் மானவ் விஜ் , அசுதோஷ் ராணா மற்றும் சாக்ஷி தன்வார் ஆகியோர் மற்ற முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் ரூ.300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது  இதன் சிறப்பு காட்சி நேற்று லக்னோவில் திரையிடப்பட்டது.  அப்போது உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு திரைப்படத்தைப் பார்த்த பிறகு படக்குழுவை வெகுவாக பாராட்டிய அவர், இந்த திரைப்படத்திற்கு மாநிலத்தில் வரிவிலக்கு அளிப்பதாக அறிவித்தார்.

தற்போது உத்தரப்பிரதேசத்தில் மட்டுமின்றி பாஜக ஆளும் உத்தரகாண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்தப் படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.