மீண்டும் முன்னாடி அம்பானி; பின்னாடி அதானி| Dinamalar

புதுடில்லி-கடந்த சில மாதங்களாக, இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் எனும் இடத்தை பிடித்திருந்த ‘அதானி’ குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, தற்போது அந்த இடத்தை இழந்துள்ளார்.முதலிடத்துக்கு மீண்டும் ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ தலைவர் முகேஷ் அம்பானி வந்துள்ளார்.

‘போர்ப்ஸ்’ நிறுவனத்தின் ‘ரியல் டைம்’ பணக்காரர்கள் பட்டியலில், கவுதம் அதானியை பின்னுக்குத் தள்ளி, முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார், முகேஷ் அம்பானி.போர்ப்ஸ் தரவுகளின் படி, முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு, 7.78 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.கவுதம் அதானியின் சொத்து மதிப்பு, 7.70 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

latest tamil news

இதையடுத்து, உலக பணக்காரர்கள் பட்டியலில், முகேஷ் அம்பானி ஆறாவது இடத்திலும்; கவுதம் அதானி ஒன்பதாவது இடத்திலும் உள்ளனர்.கவுதம் அம்பானி, தன்னுடைய இடத்திலிருந்து கீழிறங்கியபோதும், கடந்த இரு ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, அவரது சொத்து மதிப்பு மிகவும் அதிகரித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.