ஷாரூக்கின் ‛ஜவான்' ரிலீஸ் தேதி அறிவிப்பு – 5 மொழிகளில் வெளியாகிறது

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். 'ஜவான்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீஸர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஜூன் 2ம் தேதி வெளியாகும் இந்த படம் ஹிந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாவதாக அறிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.