ஸ்டார்ட்அப் நிறுவனங்களை கழுவி ஊற்றிய இன்போசிஸ் நாராயணமூர்த்தி.. என்ன காரணம்..?

இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மீது இருந்த மிகப்பெரிய நம்பிக்கை கடந்த சில மாதங்களில் படிப்படியாகக் குறைந்துள்ளது.

இதற்கு முக்கியமான காரணம் ஐபிஓ-வில் எதிர்பார்த்த அளவிற்கு லாபத்தைக் கொடுக்காததும், பணம் இல்லாமல் ஊழியர்களை அடுத்தடுத்துப் பணிநீக்கம் செய்து வரும் நிலை தான்.

இந்த நிலையில் நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ்-ன் இணை நிறுவனரும், முன்னாள் சிஇஓ-வுமான நாராயணமூர்த்தி ஸ்டார்ட்அப் நிறுவனங்களைக் கழுவி ஊற்றியுள்ளார்.

ரெடியா இருங்க.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு உங்க பணத்தை பதம் பார்க்க போகிறது..!

சோமேட்டோ ஐபிஓ

சோமேட்டோ ஐபிஓ

இந்திய பங்குச்சந்தையில் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலாவதாக ஐபிஓ வெளியிட்டு பிற நிறுவனங்களுக்கு நம்பிக்கை அளித்த நிறுவனம் என்றால் அது சோமேட்டோ தான், ஆனாஸ் சோமேட்டோ ஐபிஓ வெளியிட முக்கியமான காரணமாக இருந்து நிதி நெருக்கடி தான்.

ஐபிஓ

ஐபிஓ

சோமோட்டோ நிறுவனம் ஐபிஓ வெளியிடும் போது நிறுவனத்தை நடத்த 6 மாதங்களுக்குக் குறைவான பணம் மட்டுமே வைத்திருந்தது, வெளி சந்தையிலும், முதலீட்டாளர்கள் மத்தியிலும் முதலீட்டை பெற முடியாத காரணத்தால் ஐபிஓ வெளியிட்டாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது சோமேட்டோ.

இதைத் தான் நாராணயமூர்த்தித் தவறு எனக் கூறுகிறார்.

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
 

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்

ஸ்டார்ட்அப் நிறுவன தலைவர்கள் ஐபிஓ-வை அடுத்த முதலீட்டு சுற்று ஆகப் பார்க்கக் கூடாது, இதேபோல் வென்சர் கேப்பிடல் முதலீட்டாளர்கள் வெளியேறுவதற்காக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை காரணமாக ஐபிஓ வெளியிடுகிறது இது பெரிய தவறு என இன்போசிஸ் நாராயணமூர்த்தித் தெரிவித்துள்ளார்.

நாராயணமூர்த்தி

நாராயணமூர்த்தி

பணம் இல்லாத காரணத்தால் முதலீட்டை மட்டும் திரட்டுவது ஐபிஓ வெளியிடுவது இந்திய சந்தைக்குப் பெரும் ஆபத்து, ஐபிஓ என்பது பணம் ஈட்டுவதைத் தாண்டி ஐபிஓ மிகப்பெரிய பொறுப்பை உள்ளது என இன்போசிஸ் நாராயணமூர்த்தித் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

IPOs not funding route, it comes with more responsibility; Infy NarayanaMurthy slams startups

IPOs not funding route, it comes with more responsibility; Infy Narayana Murthy slams startups ஸ்டார்ட்அப் நிறுவனங்களைக் கழுவி ஊற்றிய இன்போசிஸ் நாராயணமூர்த்தி.. என்ன காரணம்..?

Story first published: Saturday, June 4, 2022, 12:37 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.