இந்தியப் பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருக்கும் வேளையில் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் இன்று துவங்கியுள்ளது.
நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், ரூபாய் மதிப்பை மேம்படுத்தவும், அன்னிய முதலீடுகள் வெளியேறுவதைத் தடுக்கவும் ரிசர்வ் வங்கி முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில் அமெரிக்கா மற்றும் பல ஆசிய நாடுகள் வட்டியை உயர்த்த முடிவு செய்திருக்கும் நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் முடிவு மிகவும் முக்கியமாக உள்ளது.
மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தும் ரிசர்வ் வங்கி: அதுக்காக இவ்வளவா?

சக்திகாந்த் தாஸ்
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த் தாஸ் தலைமையில் இருமாத நாணய கொள்கை கூட்டம் ஜூன் 6ஆம் தேதி துவங்க உள்ளது. ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டம் ஜூன் 6 முதல் ஜூன் 8 வரையில் நடக்கும் நிலையில் இக்கூட்டத்தின் முடிவுகள் ஜூன் 8ஆம் தேதி காலை 11 முதல் 11.30 மணியளவில் அறிவிக்கப்பட உள்ளது.

ரெப்போ விகிதம், CRR விகிதம்
இந்த இருநாள் நாணய கொள்கை கூட்டத்தில் ஆர்பஐ ரெப்போ வட்டி விகிதம், CRR விகிதம் மற்றும் பிற நாணய கொள்கை குறித்த முடிவுகளை எடுக்க உள்ளது. கடந்த நாணய கொள்கை கூட்டத்தில் ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை 0.40 சதவீதம் அதிகரித்து 4.40 சதவீதமாக அறிவித்தது. இதனால் வங்கி கடனுக்கான வட்டி விகிதங்கள் அதிகரித்து வருகிறது.

ரீடைல் பணவீக்கம்
ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது ரீடைல் பணவீக்கம் தான். ஏப்ரல் மாதம் 8 வருட உயர்வான 7.79 சதவீதத்தை எட்டியது. ஆனால் ஆர்பிஐ-யின் கடந்த வட்டி உயர்வு பணவீக்க அளவுகளைக் கணிசமாக குறைத்தது.

சந்தை கணிப்பு
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த் தாஸ் ஏற்கனவே வட்டி விகிதம் உயர்வு கட்டாயம் இருக்கும் என அறிவித்துள்ள வேளையில் இந்த நாணய கொள்கை கூட்டத்தில் 0.40 சதவீதம் உயர்த்திவிட்டு, ஆகஸ்ட் கூட்டத்தில் 0.35 சதவீதம் வரையில் உயர்த்தலாம் அல்லது அடுத்த வார கூட்டத்தில் 0.50 சதவீதமும் ஆகஸ்ட் கூட்டத்தில் 0.25 சதவீதமும் உயர்த்தப்படலாம் என சந்தை கணிப்புகள் கூறுகிறது.

பணவீக்கம்
மே மாதத்திற்கான சில்லறை விலை பணவீக்கம் ஆர்பிஐ வட்டி குறைப்பு மற்றும் வரித் தளர்வுகள் மூலம் ஏற்கனவே வெளியிட்ட கணிப்பை விடவும் 10 அடிப்படை புள்ளிகள் குறைந்து 7.0 சதவீதமாக இருக்கும் என எஸ்பிஐ வங்கி கணக்கிட்டு உள்ளது.
RBI MPC Meet starts today june 6; Decision will be announced on June 8
RBI MPC Meet starts today june 6; Decision will be announced on June 8 ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டம் ஜூன் 6 துவக்கம்.. ‘இந்த’ மாற்றங்கள் எல்லாம் கட்டாயம் நடக்குமா..?!