நூற்றாண்டு பழமையான தாவரம் ஒன்றை இந்திய தாவரவியல் ஆராய்ச்சி துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அருணாசல பிரதேசத்தின் வனப்பகுதியில் இருந்து கண்டறிந்துள்ளனர்.
1912ம் ஆண்டு பிரிட்டிஷ் தாவரவியல் வல்லுநரான ஸ்டீஃபன் ட்ராய்ட் டன் என்பவர்தான் முதலில் அருணாசல பிரதேசத்தில் இருந்து இந்தியாவின் லிப்ஸ்டிக் தாவரம் என அழைக்கப்படும் அரிய வகை தாவரத்தை கண்டறிந்தார். அதன் தாவர பெயர் Aeschynanthus monetaria Dunn ஆகும்.
குழாய் போன்ற சிவப்பு நிறத்தாலான இந்த ஈஸ்கினாந்தஸ் தாவர இனத்தின் கீழ் உள்ள இந்த தாவரம் இருப்பதால் லிப்ஸ்டிக் தாவரம் என அழைக்கப்படுகிறது என இந்திய தாவரவியல் விஞ்ஞானி கிருஷ்ணா சவ்லு அண்மையில் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 2021ல் அருணாசல பிரதேசத்தின் anjaw மாவட்டத்தில் பூக்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போதுதான் சில
தாவர மாதிரிகளை சேகரித்தாகவும், அதனை ஆய்வுக்குட்படுத்தியபோதுதான் அவை இந்தியாவின் லிப்ஸ்டிக் தாவரம் என்பது தெரிய வந்ததாகவும் கிருஷ்ணா சவ்லு தெரிவித்துள்ளார்.
இந்த லிப்ஸ்டிக் பூ 543 முதல் 1134 மீட்டர் உயரத்தில் உள்ள பசுமையான ஈரப்பதம் நிறைந்த காடுகளிலேயே வளரும். இதன் பூக்கும் மற்றும் கனியும் காலம் அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களாகும். அரியவகை தாவரமாக கருதப்படும் இது அழியும் தன்மையுடைது எனவும் தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
ALSO READ: காஃபி மெஷினின் God Father-க்கு டூடுல் போட்ட கூகுள்: யார் இந்த ஏஞ்சலோ மோரியோண்டோ?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
