ரகசிய கேமிரா…! சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள்…! சிக்கிய சைக்கோ லேடீஸ் ஹாஸ்டல் ஓனர்

லக்னோ

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் கர்னல் கஞ்ச் பகுதியில் விடுதி ஒன்றை நடத்தி வருபவர் ஆஷிஷ் கரே. இவர் கணினி லேப் ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறார்.

டாக்டர் ஒருவரின் மகனான அவர் அந்த பகுதியில் தனது விடுதியை குறைந்த வாடகைக்கு விட்டுள்ளார்.

இதில், இளம்பெண்கள் பலர் தங்கியுள்ளனர். எந்நேரமும் இளம்பெண்கள் இங்கு நிறைந்து காணப்படுவார்களாம். ஆனால், எல்லாருக்குமே ஒரே மாதிரியான கட்டணங்கள் கிடையாது. அழகான பெண்கள் என்றால் அவர்களுக்கு ஸ்பெஷல் சலுகை உண்டு. அவர்களுக்கு ஸ்பெஷல் ரூம்கள் ஒதுக்கப்படும்..

இந்நிலையில், குளியலறைக்கு இளம்பெண் ஒருவர் குளிக்க சென்றுள்ளார். ஆனால், ஷவரில் இருந்து தண்ணீர் சரியாக வரவில்லை. இதனால் ஷவரின் மேல் மூடியை கழற்றியுள்ளார். அதனை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதில் கேமிரா ஒன்றும், அதனுடன் இணைக்கப்பட்ட ஒயரும் இருந்துள்ளது. இதுபற்றி அறிய வந்த அந்த இளம்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து போலீசார் விடுதிக்கு சென்று சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு செய்துள்ளனர். இதில், அந்த புகார் சரியென தெரிய வந்தது.

ஆஷிஷ் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கேமிரா, 9 ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். அவரிடம் நடந்த விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. குளியலறையில் பதித்த கேமிராக்களின் வழியே வீடியோ காட்சிகள் பதிவு செய்யப்பட்டு, அவற்றை கணினி லேப்பில் இருந்தபடி ஆஷிஷ் பார்த்து, ரசித்து வந்துள்ளார்.

குளியலறையில் பதித்த கேமராக்களில் பதிந்த காட்சிகளை வைத்து, ஏராளமான வீடியோக்களை தயார் செய்துள்ளார்.அவைகளை லேப்டாப்களில், ஹார்டுடிஸ்க்குகளிலும் சேமித்து வைத்துள்ளார். இந்த வீடியோக்களை தினமும் இரவு நேரங்களில் பார்த்து பார்த்து ரசிப்பாராம் ஆஷிஷ்.. ஒவ்வொரு பெண்களுக்கும் தனித்தனி ஃபைல்களை போட்டு வைத்துள்ளார். அந்த வீடியோக்களுக்கு கீழே கவிதை போன்ற வாசகங்களையும் எழுதி வைத்துள்ளார்.

இந்த வீடியோக்களை சமூக ஊடகத்தில் வெளியிட்டு விடுவேன் என கூறி இளம்பெண்களை ஆஷிஷ் கரே மிரட்டியிருக்கிறார். அந்த வீடியோக்களை விற்றும் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து ஒரு டைரியையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். ஆஷிஷின் அறையை போலீசார் சோதனையிட்டபோது, ​​அங்கிருந்த வீடியோ எடிட்டிங் கம்ப்யூட்டர் மற்றும் பிற உபகரணங்களை போலீசார் கண்டுபிடித்தனர். டைரியில் பல பெண்களின் தொடர்பு விவரங்கள் இருந்தன. சோதனைக்குப் பிறகு, ஹார்ட் டிஸ்க்குகளில் பல சிறுமிகளின் ஆபாச வீடியோக்களையும் போலீசார் கண்டு பிடித்து உள்ளனர்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது ஹாஸ்டலில் தங்கியிருந்த மாணவிகள் அனைவரும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.