ரூபாயின் மதிப்பு இன்னும் மோசமான நிலையை எட்டலாம்.. எப்படி சமாளிக்க போகிறது இந்தியா?

இந்திய ரூபாயின் மதிப்பானது சமீப காலமாக மிக மோசமான சரிவினைக் கண்டு வருகின்றது. இது வரலாறு காணாத சரிவினைக் கண்டுள்ளது.

இதற்கிடையில் வரவிருக்கும் மாதங்களில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 79 – 81 ரூபாயாக சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, ரூபாயின் மதிப்பானது 77.63 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது.

லோன் ஆப் நிறுவனங்களின் அட்டூழியம்.. 5000 ரூபாய் கடனுக்கு 4.28 லட்சம் செலுத்தும் நிலை..!

அதிகபட்ச சரிவு

அதிகபட்ச சரிவு

கடந்த மாதத்தில் 77.92 ரூபாய் என்ற லெவலுக்கு அதிகபட்சமாக சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் USB AG முதல் நோமுரா ஹோல்டிங்ஸ் இன்க் வரையில் பல நிபுணர்கள் ரூபாயின் மதிப்பானது சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 4.4% சரிவினைக் கண்டுள்ளது.

தாக்கத்தினை ஏற்படுத்தலாம்

தாக்கத்தினை ஏற்படுத்தலாம்

இது தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது. இது மேற்கொண்டு பணவீக்கத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தொடர்ந்து அன்னிய முதலீடுகள் இந்திய சந்தையில் இருந்து வெளியேறி வருகின்றது. இதற்கிடையில் அமெரிக்க டாலர் மற்றும் பத்திர சந்தை உள்ளிட்ட பலவும் ரூபாயின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

முதலீட்டாளர்கள் வெளியேறலாம்
 

முதலீட்டாளர்கள் வெளியேறலாம்

ஜூன் மாத தொடக்கத்தில் அன்னிய முதலீடுகள் வெளியேற்றமானது சற்றே மிதமாகியுள்ளது. டாலர் மதிப்பு மற்றும் பத்திர சந்தையானது நிலையானதாக உள்ளது. இதன் காரணமாக அன்னிய முதலீடுகள் பெரியளவில் வெளியேறுவதை தடுக்கலாம். எனினும் அமெரிக்காவின் பணவீக்கம் அதிகரித்தால், அது பத்திர சந்தை, டாலரின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம். இதன் காரணமாக அன்னிய முதலீடுகள் வெளியேற வழிவகுக்கலாம்.

பணவீக்க அச்சம்

பணவீக்க அச்சம்

வரவிருக்கும் நாட்களில் அமெரிக்கா நுகர்வோர் பணவீக்க தரவு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் பணவீக்க கொள்கை கூட்டம் நடக்கவுள்ளது. ரிசர்வ் வங்கியிடம் கிட்டத்தட்ட 600 பில்லியன் டாலர் அன்னிய செலவாணி கையிருப்பு உள்ளது. இது ஏற்ற இறக்கத்தினை சமாளிக்க பயன்படும் என்றாலும், வரவிருக்கும் வட்டி விகித கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்ற நிலை இருந்து வருகின்றது.

சவுதியின் திட்டம்

சவுதியின் திட்டம்

சவுதி அரேபியா ஜூலை மாதம் முதல் கச்சா எண்ணெய் விலையினை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இன்று காலை தொடக்கத்திலேயே கச்சா எண்ணெய் விலையானது 121 டாலர்களுக்கு மேலாக அதிகரித்து காணப்பட்டது. இது ஒபெக் மற்றும் கூட்டணி நாடுகள் உற்பத்தியினை அதிகரிக்க திட்டமிட்டுள்ள நிலையிலும், விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இது இறக்குமதியினை அதிகம் சார்ந்துள்ள இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஆக இதுவும் ரூபாயின் மதிப்பில் சரிவினை ஏற்படுத்தலாம். இது நவம்பர் இறுதிக்குள் பேரலுக்கு 81 டாலர்கள் வரையில் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Indian rupee may fall 81 a dollar by the end of November

The value of the Indian rupee has been depreciating sharply in recent times. Experts predict that this could lead to an even worse decline.

Story first published: Monday, June 6, 2022, 12:36 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.