22வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற ரஃபேல்… வைரலாகும் ஆனந்தக் கண்ணீர் வடித்த காட்சி!

Rafael Nadal Tamil News: கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான “பிரெஞ்ச் ஓபன்” டென்னிஸ் போட்டிகள் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடால் – நார்வே நாட்டை சேர்ந்த காஸ்பர் ரூட்டை எதிர்கொண்டார். ஆட்டம் தொடங்கியது முதலே நடால் புள்ளிகளை கைப்பற்றி வந்தார். இதனால் அவர், முதல் செட்டை 6-3 என்ற புள்ளி கணக்கில் வசப்படுத்தினார்.

ஆனால், 2வது செட்டில் ரூட் அதிரடி காட்டி நிலையில், அவர் 3-1 என்ற புள்ளி கணக்கில் நடாலை விட முன்னிலையில் இருந்தார். எனினும், தொடர் முயற்சியை கைவிடாத நடால், அதிலிருந்து மீண்டு வந்து 3 புள்ளிகளை கைப்பற்றி 4-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். தொடர்ந்து முனைப்புடன் விளையாடிய அவர் 2வது செட்டையும் 6-3 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார்.

இருவரும் களமாடிய 3வது செட்டிலும் நடாலின் அதிரடி தொடர்ந்தது. அவர் ஒரு கட்டத்தில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். மேலும் அடுத்தடுத்து புள்ளிகளை கைப்பற்றி 5-0 என்று முன்னேறி ரூட்டுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். தனது சிறப்பான அதிரடி ஆட்டத்தால் நடால், இறுதிப்போட்டியை 6-3, 6-3, 6-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டதையும் தட்டி சென்றார்.

மேலும், நடால் தனது 11 வது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கோப்பையையும் முத்தமிட்டார். ஒட்டுமொத்தமாக அவர் வெல்லும் 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.

22வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று வரலாற்றை படைத்த ரஃபேல் நடாலுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அவர் மைதானத்தில் ஆனந்தக் கண்ணீர் வடிக்கும் காட்சி இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.