சர்ச்சைக்குரிய பேச்சுக்களுக்குப் புகழ்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பேசிய போது இஸ்லாம் மதத்தின் இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசினார்.
இந்தச் சர்ச்சைக்குரிய பேச்சு இந்தியாவில் இருக்கும் முஸ்லீம் மக்களைத் தாண்டி உலகின் பல நாடுகளைக் கோபமடையச் செய்துள்ளது.
இதனால் இந்திய மற்றும் அரபு நாடுகள் மத்தியிலான வர்த்தக நட்புறவில் மிகப்பெரிய விரிசல் உருவாகுமோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது.
நாங்களும் இந்திய நிறுவனம் தான்: போன்பே சி.இ.ஓ சமீர் நிகாம் தகவல்

நுபுர் சர்மா பேச்சு
நுபுர் சர்மா பேச்சுக்கு எதிராக ஈரான், ஈராக், குவைத், கத்தார், சவூதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், ஜோர்டான், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், மாலத்தீவு, லிபியா மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட 15க்கும் அதிகமான நாடுகள் இந்தியாவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.
சரி இந்தியா அரபு நாடுகளை எந்த விஷயங்களில் எல்லாம் சார்ந்துள்ளது தெரியுமா..?

இந்தியாவின் நிலை
இந்தியாவில் கச்சா எண்ணெய், எரிவாயு ஆதாரங்கள் இல்லை என்பதால் சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு நாடுகளை நம்பி மட்டுமே இந்தியா இயங்கி வருகிறது. நுபுர் சர்மா போன்றோரின் பேச்சு அரபு நாடுகள் நடவடிக்கை எடுத்தால் ஒரு மாதம் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தினால் போதும் இந்தியா மொத்தமும் முடங்கிவிடும் நிலை உள்ளது.

GCC நாடுகள்
2020-21ஆம் நிதியாண்டில் மட்டும் இந்தியா GCC நாடுகளிடம் இருந்து சுமார் 110.73 பில்லியன் டாலர் அளவிலான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. இதேபோல் 44 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு
இதைத் தாண்டி GCC நாடுகளில் அதாவது கல்ப் நாடுகளில் இந்திய மக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். இந்தியாவின் மொத்த 32 மில்லியன் என்ஆர்ஐ-களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் அரபு நாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.

இந்திய அரசு
நுபுர் சர்மா போன்றோரின் பேச்சுக்கு அரபு நாடுகள் நடவடிக்கை எடுத்தால் எரிபொருள் தடை செய்வது மட்டும் அல்லாமல் பல கோடி பேரை வேலையை விட்டு நீக்க முடியும். இவர்களுக்கு இந்திய அரசால் வேலைவாய்ப்பு கொடுக்க முடியுமா என்றால் மிகப்பெரிய கேள்விக்குறிதான்.

87 பில்லியன் டாலர் ரெமிட்டன்ஸ்
இதேபோல் தற்போது நுபுர் சர்மா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஈரான், ஈராக், குவைத், கத்தார், சவூதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், ஜோர்டான், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், மாலத்தீவு, லிபியா மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட 15க்கும் அதிகமான நாடுகளில் பணியாற்றும் என்ஆர்ஐகள் இந்தியாவுக்கு அனுப்பும் பல பில்லியன் டாலர் பணம் இழப்பு ஏற்படும். 2021ல் மட்டும் 87 பில்லியன் டாலர் பணம் வெளிநாட்டில் இருந்து ரெமிட்டன்ஸ் கிடைத்துள்ளது.

சவுதி அரேபியா
கடந்த நிதியாண்டில் இது நான்காவது பெரிய வர்த்தகக் கூட்டணி நாடாக இருந்தது. இருதரப்பு மொத்த வர்த்தகம் முந்தைய நிதியாண்டில் 22 பில்லியன் டாலரிலிருந்து 2021-22ல் சுமார் 43 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

கத்தார்
இந்தியா கத்தாரில் இருந்து ஆண்டுக்கு 8.5 மில்லியன் டன் எல்என்ஜியை இறக்குமதி செய்கிறது மற்றும் தானியங்கள் முதல் இறைச்சி, மீன், ரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வரை ஏற்றுமதி செய்கிறது.
இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையிலான இருவழி வர்த்தகம் 2020-21ல் 9.21 பில்லியன் டாலரிலிருந்து 2021-22ல் 15 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

குவைத்
கடந்த நிதியாண்டின் இந்தியாவின் 27வது பெரிய வர்த்தகக் கூட்டணியாக இருக்கிறது குவைத். இருதரப்பு வர்த்தகம் அளவு முந்தைய நிதியாண்டில் 6.3 பில்லியன் டாலராக இருந்த நிலையில் 2021-22ல் 12.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

UAE
2021-22ல் இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தகப் கூட்டணி நாடாக விளங்குகிறது. ஐக்கிய அரபு நாட்டுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் 2020-21ல் 43.3 பில்லியன் டாலராக இருந்த நிலையில் 2021-22ல் 72.9 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

ஓமன்
2021-22ல் இந்தியாவின் 31வது பெரிய வர்த்தகக் கூட்டணி நாடாக உள்ளது. ஓமன் நாட்டுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் 2020-21ல் 5.5 பில்லியன் டாலராக இருந்த நிலையில், 2021-22ல் சுமார் 10 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

பஹ்ரைன்
இந்தியாவுடனான இருவழி வர்த்தகம் 2020-21ல் 1 பில்லியன் டாலரில் இருந்து 2021-22ல் 1.65 பில்லியன் டாலராக இருந்தது.

ஈரான்
vஈரானுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் 2020-21ல் 2.1 பில்லியன் டாலராக இருந்த நிலையில், 2021-22ல் 1.9 பில்லியன் டாலராக இருந்தது.

இந்தோனேஷியா
இதேபோல் இந்தியா சமையல் எண்ணெய்க்கு அதிகளவில் நம்பியிருக்கும் நாடுகளில் இந்தோனேஷியா மிகவும் முக்கியமான ஒன்று, சமீபத்தில் இந்தோனேஷியா சில நாட்கள் மட்டுமே பாமாயில் ஏற்றுமதி தடை செய்த போது இந்தியா எந்த அளவிற்குப் பாதிப்புகளை எதிர்கொண்டது என்பதைப் பார்த்தோம்.

இந்திய பொருட்கள்
நுபுர் சர்மா பேச்சுக்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குவைத் நாட்டின் சூப்பர்மார்கெட்டுகள் சிலவற்றில் இந்திய பொருட்களை விற்பனை செய்வது நிறுத்தப்பட்டது.
இந்தியா தனி நாடாக இயங்க முடியாது, எண்ணெய்க்கு ஒரு நாடு, ஆயுதத்திற்கு ஒரு நாடு, தொழில்நுட்பத்திற்கு ஒரு நாடு எனப் பலவற்றில் பல நாடுகளை நம்பி உள்ளது.
India’s trade and jobs with GCC nations may impact after nupur sharma talks on prophet Muhammad
India’s trade and jobs with GCC nations may impact after nupur sharma talks on prophet muhammad அரபு நாடுகள் நினைத்தால்.. இந்தியாவுக்கு இவ்வளவு சிக்கலா..?!