
பிரின்ஸ் படத்தின் செகண்ட் லுக் வெளியீடு
அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், உக்ரைன் நடிகை மரியா உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் சிவகார்த்திகேயன் 20வது படத்திற்கு பிரின்ஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. அதில் உலக உருண்டையை கையில் வைத்தபடி சிவகார்த்திகேயன் போஸ் கொடுக்கிறார். அதையடுத்து இன்றைய தினம் அப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் சிவகார்த்திகேயன் மற்றும் உக்ரைன் நடிகை மரியா இருவரும் இடம் பெற்றுள்ளார்கள். இந்த இரண்டு போஸ்டர்களும் டிரெண்ட் ஆனது. தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் இந்த பிரின்ஸ் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஆக, டாக்டர், டான் என்ற ஆங்கில டைட்டில்களில் சிவகார்த்திகேயன் நடித்த இரண்டு படங்களும் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்ததால், அவரது 20ஆவது படத்திற்கும் பிரின்ஸ் என்று ஆங்கில டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.