வாட்ஸ் ஆப்பில் புதிய வசதிகள் அறிமுகம்| Dinamalar

புதுடில்லி-‘வாட்ஸ் ஆப்’ செயலியில், புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக, ‘மெட்டா’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் ஆப் செயலியை நடத்தும் மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:வாட்ஸ் ஆப் குழுவில் இனி 512 பேரை உறுப்பினர்களாக சேர்க்க முடியும். மேலும், 2 ஜி.பி., வரை போட்டோ மற்றும் ‘வீடியோ’வை பகிரலாம்.

இதற்கு முன், வாட்ஸ்- ஆப் ‘வாய்ஸ் கால்’ வசதியில் ஒரே நேரத்தில் எட்டு பேர் மட்டுமே பேச முடியும்; இனி 32 பேர் உரையாடலாம். இந்த புதிய வசதிகளை அடுத்த 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.