தங்கம் விலை வரும் வாரத்த்தில் கூடுமா குறையுமா.. நிபுணர்களின் செம்ம அப்டேட்..!

தங்கம் முதலீடானாலும் சரி, ஆபரணமானாலும் சரி, இன்றைய காலகட்டத்திலும் மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக பணவீக்க காலகட்டத்தில் மிக சிறந்த ஹெட்ஜிங் ஆகவும் பார்க்கப்படுகிறது.

சமீபத்திய அறிக்கை ஒன்றில் கமாடிட்டி நிபுணர் ஒருவர் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் அவ்வப்போது சரியலாம். ஆனால் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக இருப்பதால் நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்.

ஆக தங்கம் விலையானது அவ்வப்போது சரிவினைக் கண்டாலும், நீண்டகால நோக்கில் நிச்சயம் அதிகரிக்கலாம். இது தங்கம் விலைக்கு சாதகமாக அமையலாம். எனினும் வட்டியை அதிகரிக்கும் பட்சத்தில் அது தங்கத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் . இது தங்கம் விலைக்கு சாதகமாக அமையலாம் என கூறினார்.

செம சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா நிபுணர்களின் கணிப்பு என்ன?

ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம்

ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம்

தற்போது தங்கம் விலையானது பணவீக்கத்திற்கு எதிராக மீண்டும் தொடர்ந்து ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டமானது ஜூன் 14 மற்றும் ஜூன்15 அன்று நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலையில் ஏற்ற இறக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாலர் இன்டெக்ஸ்

டாலர் இன்டெக்ஸ்

டாலரின் மதிப்பானது வரலாறு காணாத அளவு உச்சத்தினை எட்டியுள்ளது. இது 103 டாலர்கள் என்ற லெவலுக்கு மேலாக முடிவடைந்துள்ளது. இது இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு இந்தளவுக்கு வலுவடைந்துள்ளது. இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

சீனாவின் உற்பத்தி தரவு
 

சீனாவின் உற்பத்தி தரவு

சீனாவின் தொழில்துறை குறித்தான உற்பத்தி தரவானது வரும் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். குறிப்பாக சீனாவில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு உற்பத்தி பாதிக்கப்படலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்தியாவின் பணவீக்க தரவு

இந்தியாவின் பணவீக்க தரவு

இந்தியாவின் பணவீக்கம் குறித்தான தரவும் மிக கவனமாக முதலீட்டாளர்கள் மத்தியில் கவனிக்கப்பட்டு வருகின்றது. இது உள்நாட்டு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடும். இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

திரவத் தங்கம் என்று அழைக்கப்படும் கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து உச்சம் எட்டி வரும் நிலையில், இது பணவீக்கத்தினை தூண்டலாம். இது தொடர்ந்து சர்வதேச அளவில் தேவையானர்து மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தொடர்ந்து பற்றாக்குறையே இருந்து வருகின்றது. இது மேற்கோண்டு பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

5 key factors that will determine the price of gold in the coming weeks

What are the 5 key factors that will determine the price of gold in the coming week. What are the things to look out for.

Story first published: Sunday, June 12, 2022, 11:14 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.