
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர்
உலகளவில் பிரபலமான பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். பாப் இசை உலகில் பல ஹிட் பாடல்களைக் கொடுத்து கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் பாடகர் ஜஸ்டின் பீபர். இந்நிலையில் ஸ்டின் பீபர் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொகுறித்து ஜஸ்டின் பீபர் வெளியிட்டுள்ள விடீயோவில், தான் ராம்சே ஹன்ட் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அது தனது முக நரம்புகளை தாக்கி ஒற்றைப் பக்க தசைகளை செயலிழக்க செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் எனது ஒற்றைப் பக்க காது மற்றும் முக தசைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒருபக்கம் கண் இமைக்க முடியவில்லை , ஒரு பக்கத்தால் சிரிக்க முடியாது. சரியாகி விடுவேன் என உறுதியுடன் இருக்கிறேன். ” என்று தெரிவித்துள்ளார்.