புதுடெல்லி: ஹரியானாவை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ குல்தீப் பிஷ்னாய். மாநிலங்களவை தேர்தலில் இவர், கட்சி மாறி, பாஜக ஆதரவுபெற்ற சுயேச்சை வேட்பாளர் கார்திகேயா சர்மா என்பவருக்கு வாக்களித்தார். இதன் காரணமாக காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மாக்கன் தோல்வியடைந்தார்.
இதனால் குல்தீப் பிஷ்னாயை, அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கி காங்கிரஸ் தலைவர் சோனியா அறிவித்துள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக காங்கிரஸ் செயலாளர் கே.சி வேணுகோபால் தெரிவித்துள்ளார். குல்தீப் பிஷ்னாயின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ரத்து செய்யும்படியும், சட்டப்பேவை சபாநாயகருக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதவுள்ளது.