தங்க நகை மற்றும் வைர நகை வணிகத்தில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்றான மலபார் கோல்டு அண்ட் டைமண்ட் நிறுவனம் இந்தியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.9,860 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
கொச்சியில் சமீபத்தில் நடந்த முதலீட்டாளர்கள் வட்டமேசை மாநாட்டில் மலபார் குழுமத்தின் தலைவர் எம்பி அகமது அவர்கள் கலந்து கொண்டார்.
இந்தியாவிலும் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறையா?
இந்தக் கூட்டத்தில் அவர் பேசியபோது அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.9,860 கோடி முதலீடு செய்யப் போவதாக அவர் உறுதியளித்துள்ளார். இந்த கூட்டத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்
பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா’ என்ற முறையை பின்பற்றி வரும் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் ‘மார்க்கெட் டு தி வேர்ல்டு’ என்ற முயற்சியையும் எடுத்திருப்பதாகவும், அதனால் சமீபகாலத்தில் முதலீடுகளை அதிகரித்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

500 புதிய ஷோரூம்கள்
வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் 500 புதிய ஷோரூம்கள் திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் இந்த நிதி ஆண்டில் மட்டும் இந்தியாவில் 60 ஷோரூம்களும், வெளிநாடுகளில் 37 ஷோரூம்களும் திறக்கப்படும் என்றும் எம்பி அகமது தெரிவித்தார். இதன் காரணமாக இந்தியாவில் சுமார் 11 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பியூஸ் கோயல்
இந்தியாவில் கூடுதலாக முதலீடு செய்வதிலும், விரிவாக்கத் திட்டங்கள் மூலம் வணிகத்தை பெருக்க மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும் அந்த நிறுவனத்திற்கு தனது பாராட்டுகள் என்றும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேசும்போது பாராட்டு தெரிவித்தார். இந்த விஷயத்தில் மலபார் கோல்ட் நிறுவனம் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு மத்திய அரசு எப்போதும் ஆதரவு அளிக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

வர்த்தகம்
மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் நடப்பு நிதி ஆண்டில் சுமார் 45 ஆயிரம் கோடி வர்த்தகத்தை இலக்காக கொண்டுள்ளதாகவும் அதேபோல் நிறுவனத்தில் கிடைக்கும் லாபத்தில் 5% சமூக பணிகளுக்காக ஒதுக்கவும் திட்டமிட்டு உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

10 நாடுகள்
தற்போது, இந்தியா, யுஏஇ, குவைத், பஹ்ரைன், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகிய 10 நாடுகளில் மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட் நிறுவனம் சுமார் 280 ஷோரூம்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் கனடா, பிரிட்டன், எகிப்து, மொராக்கோ மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகளில் ஷோரூம்களை திறக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஏற்றுமதி
மே 1 அன்று FTA நடைமுறைக்கு வந்தபோது, ஒப்பந்தத்தின் கீழ் UAEக்கு சப்ளை செய்த மூன்று ஏற்றுமதியாளர்களில் மலபார் கோல்டு நிறுவனமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
Malabar Gold to invest Rs 9,860 crore in three years
Malabar Gold to invest Rs 9,860 crore in three years | இந்தியாவில் ரூ.9,860 கோடி புதிய முதலீடு: மலபார் கோல்ட் அறிவிப்பு